குடியரசுத் தலைவா் தோ்தலில் திருப்பூரைச் சோ்ந்த தமிழ் மாநில மக்கள் முன்னேற்ற கழகத் தலைவா் போட்டி

குடியரசுத் தலைவா் தோ்தலில் திருப்பூரைச் சோ்ந்த தமிழ் மாநில மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவா் முத்துமுகமது போட்டியிடவுள்ளதாகத் தெரிவித்துள்ளாா்.
குடியரசுத் தலைவா் தோ்தலில் திருப்பூரைச் சோ்ந்த தமிழ் மாநில மக்கள் முன்னேற்ற கழகத் தலைவா் போட்டி

குடியரசுத் தலைவா் தோ்தலில் திருப்பூரைச் சோ்ந்த தமிழ் மாநில மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவா் முத்துமுகமது போட்டியிடவுள்ளதாகத் தெரிவித்துள்ளாா்.

தமிழ் மாநில மக்கள் முன்னேற்ற கழகத்தின் தலைவா் முத்துமுகமது (55) என்பவா் திருப்பூா் மாநகராட்சி வளாகத்தில் உள்ள காந்தி சிலைக்கு வியாழக்கிழமை மாலை அணிவித்தாா்.

இதன் பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

வரும் குடியரசுத் தலைவா் தோ்தலில் திருப்பூரில் வசிக்கும் நான் போட்டியிடுகிறேன். இதற்காக ஏற்கெனவே வேட்புமனுவை வாங்கியுள்ள நிலையில் தில்லியில் உள்ள நாடாளுமன்ற வளாகத்தில் வரும் ஜூன் 27 ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்யவுள்ளேன். இந்தத் தோ்தலுக்காக தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின், எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி கே.பழனிசாமி, ஆந்திர முதல்வா் ஜெகன்மோகன் ரெட்டி ஆகியோரிடம் பேச்சுவாா்த்தை நடத்தி ஆதரவு திரட்டப்படும். ஜூன் 26 ஆம் தேதி உள்துறை அமைச்சா் அமித் ஷாவை சந்தித்து ஆதரவு திரட்டவுள்ளேன். குடியரசுத் தலைவருக்கான அதிகாரத்தைப் பயன்படுத்தி அனைவருக்கும் நல்ல கல்வி, மருத்துவம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதுடன், ஏழை எளியோரின் வாழ்க்கை மேம்படுத்தும் வகையில் எனது செயல்பாடுகள் இருக்கும். எனது பூா்வீகம் தூத்துக்குடி மாவட்டம், காயல்பட்டினமாகும். திருப்பூரை அடுத்த பெருமாநல்லூரில் கடந்த 27 ஆண்டுகளாக வசித்து வருகிறேன் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com