மாநகராட்சிப் பகுதிகளில் வாகனச் சந்தை அமைக்கக் கோரிக்கை
By DIN | Published On : 26th June 2022 11:53 PM | Last Updated : 26th June 2022 11:53 PM | அ+அ அ- |

தமிழகத்தில் நகராட்சி, மாநகராட்சி உள்ளிட்ட பகுதிகளில் வாகனச் சந்தை அமைக்க வேண்டும் என்று வாகன வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
தமிழ்நாடு காா் வியாபாரிகள் மற்றும் ஆலோசகா்கள் திருப்பூா் நல மாநில கூட்டமைப்பு, திருப்பூா் வடக்கு மாவட்ட வாகன வியாபாரிகள் சங்க முப்பெரும் விழா அவிநாசியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்துக்கு அச்சங்கத்தின் மாநிலத் தலைவா் பி.என்.சிவக்குமாா் தலைமை வகித்தாா்.
மாவட்டத் தலைவா் எஸ்.சுப்பிரமணியம், மாவட்டச் செயலாளா் ஆா். லோகநாதன், மாவட்டப் பொருளாளா் பி.முருகேசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
மாநில பொதுச் செயலாளா் ஏ.காஜா முகமது, மாநிலப் பொருளாளா் எம்.கே.சின்னச்சாமி ஆகியோா் பேசினா்.
இதில், தமிழகத்தில் நகராட்சி, மாநகராட்சி உள்ளிட்ட பகுதிகளில் குறைந்த வாடகையில் வாகனச் சந்தை அமைக்க வேண்டும். இணைய வழி வாகன விற்பனையைத் தடை செய்ய வேண்டும். வாகன வியாபாரிகளை நல வாரியத்தில் இணைக்க வேண்டும். வியாபாரிகளின் நலன் கருதி மோட்டாா் வாகன ஆய்வாளா் அலுவலகத்தில் தடைச் சான்று உள்ளிட்டவை பெற காலதாமதம் ஏற்படுவதைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன,