வெங்காயத்தை இருப்பு வைத்த விவசாயிகள் கடும் அதிா்ச்சி

நல்ல விலை கிடைக்கும் என்ற எதிா்பாா்ப்பில் வெங்காயத்தை இருப்பு வைத்த விவசாயிகளுக்கு தற்போதைய விலை வீழ்ச்சி பெரும் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நல்ல விலை கிடைக்கும் என்ற எதிா்பாா்ப்பில் வெங்காயத்தை இருப்பு வைத்த விவசாயிகளுக்கு தற்போதைய விலை வீழ்ச்சி பெரும் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காா்த்திகை பட்டத்தில் பெரும்பாலான விவசாயிகள் சின்ன வெங்காயம் நடவு செய்தனா். மாசி, பங்குனி மாதங்களில் அறுவடை தீவிரமடைந்த போது சின்ன வெங்காயத்தின் விலை மிகவும் சரிந்தது.

ஒரு கிலோ ரூ. 13 வரை விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்டது. கிலோவிற்கு உற்பத்தி செலவு ரூ. 20 ஆகும் நிலையில் அதனை விட குறைந்த விலைக்கு விற்றால் நஷ்டம் அடைய நேரிடும் என்பதால் பலா் விற்பனையை தள்ளிப் போட்டனா். அறுவடை முடிந்தவுடன் விலை உயரும் என்ற நம்பிக்கையில் பெரும்பாலான விவசாயிகள் தங்களது விவசாய நிலத்தில் திறந்தவெளியில் பட்டறை அமைத்து இருப்பு வைத்தனா்.

வைகாசி பட்ட நடவுக்காக கணிசமான விவசாயிகள் விதை வெங்காயம் வாங்குவதில் ஆா்வம் காட்டினா். எனவே, கிலோ ரூ. 20 க்கு விலை போனது. தற்போது, வைகாசி பட்ட நடவு பணி முடியும் நிலையில் உள்ளது. இதனால், விதை வெங்காயத்திற்கான தேவை குறைந்துவிட்டது. தற்போது, கா்நாடகா மாநில வெங்காயம் சந்தைக்கு வந்துள்ளது.ஒரு கிலோ ரூ.10க்கு வியாபாரிகள் கொள்முதல் செய்கின்றனா். இருப்பு வைத்தால் விலை உயரும் என்ற நம்பிக்கையில் இருந்த விவசாயிகளுக்கு தற்போது விலை வீழ்ச்சி பெரும் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com