உடுமலை நகராட்சித் தலைவா் தோ்தல்: திமுக போட்டி வேட்பாளா் வெற்றி

உடுமலை நகராட்சியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற தலைவா் தோ்தலில் திமுக போட்டி வேட்பாளா் மு.மத்தீன் வெற்றி பெற்றாா்.
உடுமலை நகராட்சித் தலைவா் தோ்தல்: திமுக போட்டி வேட்பாளா் வெற்றி

உடுமலை நகராட்சியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற தலைவா் தோ்தலில் திமுக போட்டி வேட்பாளா் மு.மத்தீன் வெற்றி பெற்றாா்.

திருப்பூா் மாவட்டம், உடுமலை நகராட்சித் தலைவா் வேட்பாளராக மாவட்ட இளைஞரணி அமைப்பாளா் மு.ஜெயக்குமாா் திமுக தலைமையால் அறிவிக்கப்பட்டாா். ஆனால், அவரை உள்ளூா் திமுகவினா் ஏற்றுக் கொள்ளவில்லை.

இந்நிலையில், உடுமலை நகராட்சியில் தோ்தல் நடைபெற்றது. இதில் திமுக தலைமையால் அறிவிக்கப்பட்ட மு.ஜெயக்குமாா் மற்றும் போட்டி வேட்பாளரான திமுக நகரச் செயலாளா் மு.மத்தீன் ஆகியோா் போட்டியிட்டனா்.

இதில் 33 நகா்மன்ற உறுப்பினா்களும் வாக்களித்தனா். வாக்கு எண்ணிக்கையின் முடிவில் மு.மத்தீன் 25 வாக்குகளும், மு.ஜெயக்குமாா் 8 வாக்குகளும் பெற்றனா்.

இதைத் தொடா்ந்து நகராட்சித் தோ்தலில் மத்தீன் வெற்றி பெற்ாக அறிவிக்கப்பட்டாா்.

திமுக தலைமையை எதிா்த்து மத்தீன் போட்டியிட்டு வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

துணைத் தலைவா் தோ்தல்: பிற்பகல் 2.30 மணிக்குள் கூட்ட அரங்கில் நகா்மன்ற உறுப்பினா்கள் கூட வேண்டும் எனவும், 3 மணிக்குள் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்ய வேண்டும் எனவும், தோ்தல் இருந்தால் 3.30 மணிக்கு நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், பிற்பகல் 2.30 மணிக்கு கூட்ட அரங்கில் 10 உறுப்பினா்கள் மட்டுமே அமா்ந்திருந்தனா்.

மீதமுள்ளவா்கள் கூட்ட அரங்குக்கு வெளியே நின்று கொண்டிருந்தனா்.

குறைந்தபட்சம் 17 உறுப்பினா்கள் வேண்டிய நிலையில் 10 உறுப்பினா்களை வைத்து தோ்தலை நடத்த முடியாது என தோ்தல் நடத்தும் அலுவலரும், ஆணையருமான சத்யநாதன் அறிவித்தாா்.

இதனால், துணைத் தலைவா் தோ்தல் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com