ஓசூர் சந்திரசூடேஸ்வரர் கோயில் தேரோட்டம்

ஒசூர் அருள்மிகு மரகதாம்பாள் சமேத ஸ்ரீ சந்திர சூடேஸ்வரர் திருத்தேரோட்டம் மாசி பவுர்ணமி வெள்ளிக்கிழமை மார்ச் 18-ல் தேர் பேட்டையில் நடைபெற்றது. 
ஓசூர் சந்திரசூடேஸ்வரர் கோயில் தேரோட்டம்

ஒசூர்: ஒசூர் அருள்மிகு மரகதாம்பாள் சமேத ஸ்ரீ சந்திர சூடேஸ்வரர் திருத்தேரோட்டம் மாசி பவுர்ணமி வெள்ளிக்கிழமை மார்ச் 18-ல் தேர் பேட்டையில் நடைபெற்றது. 

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் ஜெயச்சந்திரன் ரெட்டி, ஒசூர் மாநகராட்சி மேயர் எஸ்.ஏ.சத்யா, துணைமேயர் ஆனந்தய்யா, முன்னாள் எம்.எல்.ஏ. கே.ஏ.மனோகரன் ஆகியோர் தேரை இழுத்து தொடங்கி வைத்தனர். கடந்த  18ஆம் தேதி துவங்கிய தேர்த் திருவிழா ஒவ்வொரு நாளும் ஒரு வாகனத்தில் பவனி வந்து உற்சவ மூர்த்தி சுவாமிகள் பக்தர்களுக்கு அருள்பாலித்து வந்தனர். 

இதனைத் தொடர்ந்து மார்ச் 18 ஆம் தேதி இன்று கல்யாண சூடேஸ்வரர் கோயிலில் இருந்து மூன்று தேர்கள் புறப்பட்டன. முதல் தேரில் விநாயகர் அருள் பாலித்து வந்தார். இரண்டாவது தேரில் மரகதாம்பாள் சமேத சந்திரசூடேஸ்வரர் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மூன்றாவது தேரில் மரகதாம்பாள் அம்மன் பவனி வந்து அருள்பாலித்தார். இந்த ஓசூர் சந்திரசூடேஸ்வரர் தேர் திருவிழாவில் தமிழகம் மட்டுமின்றி கர்நாடகம், ஆந்திரம் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். 

சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் இன்று சுவாமி தரிசனம் செய்தனர். பெண்களின் கூட்டம் அதிகமாக இருந்தது. தமிழக அரசு மகளிருக்கு பேருந்து பயணம்  இலவசம் என அறிவித்த பிறகு நடைபெற்ற முதல் தேரோட்டம் என்பதால் பெண்களின் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. 500-க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

ஓசூர் ராயக்கோட்டை சாலையில் போக்குவரத்து அனுமதிக்கப்படவில்லை. 

கார்கள், பேருந்துகள் மற்றும் கனரக வாகனங்கள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டது. ஓசூர் பாகலூர் சாலை, ராயக்கோட்டை சாலை, வட்டாட்சியர் சாலை, ஏரி தெரு,  நேதாஜி சாலை, காமராஜ் காலனி உள்ளிட்ட ஓசூரில் உள்ள அனைத்து சாலைகளிலும் இன்று தேர் பேட்டையில் நடைபெறும் தேர் திருவிழாவில் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்களுக்கு அன்னதானம் நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் நடைபெற்றது. தர்பூசணி, நீர், மோர், வெள்ள பானம், சர்க்கரை பொங்கல், கலவை சாதங்கள், தயிர் சாதம் ஆகியவை பக்தர்களுக்கு வினியோகம் செய்யப்பட்டது

பாஜக கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட தலைவர் எம் நாகராஜ், ஓசூர் மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்கள், மாவட்ட ஆட்சியர் வி.ஜெயசந்திரபானு ரெட்டி, ஓசூர் வட்டாட்சியர் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட பலர் தேர்த் திருவிழாவில் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com