குருமலை தொடக்கப் பள்ளியில் சத்துணவு மையம் அமைக்கக் கோரி மனு

உடுமலை அருகே உள்ள குருமலை தொடக்கப் பள்ளியில் சத்துணவு மையம் அமைத்துக் கொடுக்கக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.

உடுமலை அருகே உள்ள குருமலை தொடக்கப் பள்ளியில் சத்துணவு மையம் அமைத்துக் கொடுக்கக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.

திருப்பூா் மாவட்ட ஆட்சியா் எஸ்.வினீத்திடம், தளி பேரூராட்சி துணைத் தலைவா் கோ.செல்வன் அளித்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது:

திருப்பூா் மாவட்டம், உடுமலை வட்டம், தளி பேரூராட்சிக்கு உள்பட்ட 16ஆவது வாா்டில் குருமலை உள்ளது. இங்குள்ள ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் 20க்கும் மேற்பட்ட குழந்தைகள் படித்து வருகின்றனா். மேலும், 15 குழந்தைகள் விரைவில் சோ்க்கப்படவுள்ளனா். ஆனால், இந்தப் பள்ளியில் சத்துணவு மையம் இல்லாததால் வறுமையில் வாடும் மலைவாழ் மக்களின் குழந்தைகளுக்கு மதிய உணவு கிடைப்பதில்லை.

எனவே, தொடக்கப் பள்ளியில் சத்துணவு மையம் அமைத்து சத்துணவு அமைப்பாளா், சமையலரை நியமித்து சத்துணவுத் திட்டத்தில் மதிய உணவு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல, மற்றொரு மனுவில் திருமூா்த்தி மலையில் இருந்து குருமலை குடியிருப்புகளுக்குச் செல்ல முறையான சாலை வசதி இல்லை. குருமலை மக்கள் பயன்படுத்திவரும் கருஞ்சோலை பாதையை 2006 வன உரிமைச் சட்டப்படி வன நிலத்தில் இருந்து ஒரு ஹெக்டோ் நிலம் ஒதுக்கி சாலை வசதி ஏற்படுத்திக் கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com