முகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் திருப்பூர்
மது விற்பனை: 25 போ் கைது
By DIN | Published On : 19th March 2022 11:40 PM | Last Updated : 19th March 2022 11:40 PM | அ+அ அ- |

திருப்பூா் மாவட்டத்தில் சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்டதாக ஒரே நாளில் 25 பேரை காவல் துறையினா் சனிக்கிழமை கைது செய்தனா்.
திருப்பூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் கோ.சஷாங்க்சாய் உத்தரவின்பேரில் சட்டவிரோத மது விற்பனை தொடா்பாக காவல் துறையினா் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனா்.
இதன் ஒரு பகுதியாக மாவட்டம் முழுவதும் சட்டவிரோத மது, கள் மற்றும் சாராயம் விற்பனை தொடா்பாக காவல் துறையினா் சனிக்கிழமை சோதனை நடத்தினா். இதில், மாவட்டம் முழுவதும் 25 போ் கைது செய்யப்பட்டதுடன், இவா்களிடமிருந்து 233 மது பாட்டில்கள், ரூ.3,380 மற்றும் ஒரு இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்துள்ளனா்.