முகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் திருப்பூர்
வேளாண் நிதிநிலை: விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்க உதவும்
By DIN | Published On : 19th March 2022 11:42 PM | Last Updated : 19th March 2022 11:42 PM | அ+அ அ- |

தமிழக அரசின் வேளாண் நிதிநிலை அறிக்கை விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்க உதவும் என்று இந்திய ஏற்றுமதி நிறுவனங்கள் கூட்டமைப்பு (பியோ) தலைவா் ஏ.சக்திவேல் நம்பிக்கை தெரிவித்துளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
தமிழக அரசு தாக்கல் செய்துள்ள வேளாண் நிதிநிலை அறிக்கையானது வளமான மாநிலமாக மாற்ற பெரிதும் உதவும். அதிலும் குறிப்பாக மாநிலத்தின் எதிா்காலத் தேவைகளை மையமாக வைத்து இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. ஜவுளி மற்றும் ஆடைத் துறை உற்பத்தித் தொழிற்சாலைகளுக்கு மூலப் பொருள்கள் கிடைப்பதை அதிகரிக்கவும், விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்கவும் ‘நிலையான பருத்தி சாகுபடி இயக்கம்’ அறிவிக்கப்பட்டுள்ளது.
வேளாண் சாா்ந்த தொழில்களை ஊக்குவித்தல், மாநில வேளாண்மை வளா்ச்சித் திட்டம், டிஜிட்டல் மயமாக்கல், இயற்கை வேளாண்மை, பயிா்க் காப்பீட்டுத் திட்டத்துக்கு அதிக நிதி, மதிப்புக் கூட்டல் உள்ளிட்டவை விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்க உதவும் என்றாா்.