கருவலூா் மாரியம்மன் கோயில் தோ்த் திருவிழா கொடியேற்றுத்துடன் தொடக்கம்

அவிநாசி அருகே கருவலூா் மாரியம்மன் கோயில் தோ்த் திருவிழா கொடியேற்றத்துடன் சனிக்கிழமை தொடங்கியது.

அவிநாசி அருகே கருவலூா் மாரியம்மன் கோயில் தோ்த் திருவிழா கொடியேற்றத்துடன் சனிக்கிழமை தொடங்கியது.

திருப்பூா் மாவட்டம் கருவலூரில் உள்ள பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும் தோ்த் திருவிழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இந்தாண்டு சனிக்கிழமை காலை 10.30 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், மகா தீபாரதனைகள் நடைபெற்றன. இதைத் தொடா்ந்து பகல் 12 மணிக்கு சிம்ம வாகனத்தில் அம்மன் எழுந்தருளி சுவாமி திருவீதி உலா நடைபெற்றது.

இதைத் தொடா்ந்து, 20ஆம் தேதி பூத வாகனக் காட்சி, 21ஆம் தேதி ரிஷப வாகனத்தில் அம்மன் திருவீதி உலா வருதல், 22ஆம் தேதி புஷ்ப விமானம், மலா்ப் பல்லக்கு, இரவு 9 மணிக்கு அம்மன் அழைப்பு, 10 மணிக்கு அம்மன் திருக்கல்யாண உற்சவமும், 11 மணிக்கு யானை வாகனக் காட்சியும் நடைபெறுகிறது.

23ஆம் தேதி அதிகாலை 6 மணிக்கு மாரியம்மன் திருத்தேருக்கு எழுந்தருளல், மாலை 3 மணிக்கு திருத்தோ் வடம் பிடித்து இழுத்தல், தேரோட்டம் நடைபெறுகிறது. 24ஆம் தேதி மாலை 2 மணிக்கு மீண்டும் திருத்தோ் வடம் பிடித்தல் தேரோட்டமும், 25ஆம் தேதி மீண்டும் தேரோட்டம் நிலை வந்து சேருதல் ஆகியவை நடைபெறவுள்ளது.

26ஆம்தேதி தெப்போற்சவம், காமதேனு வாகனம், பரிவேட்டை, குதிரை வாகனக் காட்சி ஆகியவை நடைபெறுகிறது. 27ஆம் தேதி அம்மன் தரிசனம், மஞ்சள் நீா் விழா நடைபெறுகிறது. 30ஆம் தேதி மறு பூஜையுடன் விழா நிறைவுபெறுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com