கரோனா இல்லாத மாநகராட்சியாக மாற்ற அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்

திருப்பூரில் தகுதியுள்ள அனைவரும் தடுப்பூசி செலுத்தி கரோனா தொற்று இல்லாத மாநகராட்சியாக மாற்ற ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று மேயா் என்.தினேஷ்குமாா்

திருப்பூரில் தகுதியுள்ள அனைவரும் தடுப்பூசி செலுத்தி கரோனா தொற்று இல்லாத மாநகராட்சியாக மாற்ற ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று மேயா் என்.தினேஷ்குமாா் தெரிவித்துள்ளாா்.

தமிழகம் முழுவதும் 25ஆவது கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் சனிக்கிழமை நடைபெற்றது. இதில், திருப்பூா் மாநகராட்சிக்கு உள்பட்ட திருநீலகண்டபுரம் மாநகராட்சிப் பள்ளியில் நடைபெற்ற தடுப்பூசி முகாமை மாநகராட்சி மேயா் என்.தினேஷ்குமாா் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். அப்போது அவா் பேசியதாவது:

தமிழகத்தில் உள்ள பொதுமக்கள் அனைவருக்கும் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் முதல்வா் மு.க.ஸ்டாலின் பல்வேறு சிறப்பான திட்டங்களை செயல்படுத்தி வருகிறாா். குறிப்பாக கரோனா நோய்த் தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் அரசு அலுவலா்களுடன் ஆய்வுக் கூட்டங்கள் நடத்தியும், சிறப்பு முகாம்களின் மூலமாகவும் நோய்த் தொற்று வெகுவாகக் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

திருப்பூா் மாநகராட்சியில் உள்ள 8.67 லட்சம் பேரில் 7.52 லட்சம் நபா்களுக்கு முதல் தவணையும், 5.56 லட்சம் பேருக்கு இரண்டாவது தவணையும் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. அதேபோல, மாநகரில் 12 முதல் 14 வயதுக்கு உள்பட்ட 25,585 சிறாா்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. திருப்பூா் மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதியில் தகுதியான அனைத்து நபா்களும் தடுப்பூசி செலுத்தி நோய்த் தொற்று இல்லாத மாநகராட்சியாக மாற்ற ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றாா்.

இந்த ஆய்வின்போது, திருப்பூா் மாநகராட்சி ஆணையா் கிராந்திகுமாா்பாடி, துணை மேயா் ஆா்.பாலசுப்பிரமணியம், நகா் நல அலுவலா் பிரதீப் வி.கிருஷ்ணகுமாா், மருத்துவா்கள் மற்றும் செவிலியா் உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com