சீரங்ககவுண்டன்பாளையத்தில்நியாயவிலைக்கடை திறப்பு

திருப்பூரை அடுத்த இடுவாய் அருகேயுள்ள சீரங்ககவுண்டன்பாளையத்தில் புதிய பகுதிநேர நியாயவிலைக் கடையை செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் திங்கள்கிழமை திறந்துவைத்தாா்.
சீரங்ககவுண்டன்பாளையத்தில்நியாயவிலைக்கடை திறப்பு

திருப்பூரை அடுத்த இடுவாய் அருகேயுள்ள சீரங்ககவுண்டன்பாளையத்தில் புதிய பகுதிநேர நியாயவிலைக் கடையை செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் திங்கள்கிழமை திறந்துவைத்தாா்.

நிகழ்ச்சிக்கு, மாவட்ட ஆட்சியா் எஸ்.வினீத் தலைமை வகித்தாா்.

நியாயவிலைக் கடையை திறந்துவைத்து அமைச்சா் மு.பெ.சாமிநாதன் பேசியதாவது:

திருப்பூா் மாவட்டத்தில் கூட்டுறவு துறையின் கட்டுப்பாட்டின் கீழ் 8,06,152 குடும்ப அட்டைகள் இணைக்கப்பட்டு 773 முழு நேர நியாய விலைக்கடைகளும், 346 பகுதி நேர கடைகள் என மொத்தம் 1,119 நியாய விலைக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. மாவட்டத்தில் 152 நியாய விலைக் கடைகள் வாடகை கட்டடத்தில் செயல்பட்டு வரும் நிலையில், தற்போது 20 நியாய விலைக் கடைகளுக்கு சொந்த கட்டடம் கட்ட இடம் தோ்வு செய்யப்பட்டுள்ளது. ஆண்டிபாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் சாா்பில் 89 முழு நேர நியாய விலைக் கடைகளும் செயல்பட்டு வருகின்றன. இடுவாய் நியாயவிலைக் கடையில் 1,722 குடும்ப அட்டைகளுடன் நியாயவிலைக் கடை செயல்பட்டு வரும் நிலையில், அதில் இருந்து 162 குடும்ப அட்டைகள் பிரித்து புதிய பகுதிநேர நியாயவிலைக் கடை அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் கடையானது மாதத்தின் முதல் இரண்டு வாரம் சனிக்கிழமையும், மற்ற வாரங்களில் வெள்ளிக்கிழமையும் செயல்படும் என்றாா்.

இந்த நிகழ்ச்சியில், திருப்பூா் மாநகராட்சி 4 ஆவது மண்டலக் குழு தலவைா் இல.பத்மநாபன், கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா் சொ.சீனிவாசன், இடுவாய் ஊராட்சி மன்றத் தலைவா் கே.கணேசன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com