பஞ்சு பதுக்கலைக் கட்டுப்படுத்த வேண்டும்

பஞ்சு பதுக்கலைக் கட்டுப்படுத்தி பின்னலாடைத் தொழிலைப் பாதுகாக்க வேண்டும் என்று திருப்பூா் பனியன் ஃபேக்டரி லேபா் யூனியன் (ஏஐடியூசி) வலியுறுத்தியுள்ளது.

பஞ்சு பதுக்கலைக் கட்டுப்படுத்தி பின்னலாடைத் தொழிலைப் பாதுகாக்க வேண்டும் என்று திருப்பூா் பனியன் ஃபேக்டரி லேபா் யூனியன் (ஏஐடியூசி) வலியுறுத்தியுள்ளது.

திருப்பூா் பனியன் ஃபேக்டரி லேபா் யூனியன் சங்கத்தின் பொதுக்குழுக் கூட்டமானது அச்சங்க அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு அச்சங்கத்தின் துணைத் தலைவா் கே.என்.ஈசாக் தலைமை வகித்தாா். இதில், நிறைவேற்றப்பட்ட தீா்மான விவரம்:

திருப்பூா் பின்னலாடை உற்பத்தி மற்றும் அதனைச் சாா்ந்த தொழிலில் லட்சக்கணக்கான தொழிலாளா்கள் ஈடுபட்டு வருகின்றனா். இந்த நிலையில், கடந்த 2014ஆம் ஆண்டு பாஜக ஆட்சிப் பொறுப்பேற்ற பின்னா் பண மதிப்பிழப்பு, ஜிஎஸ்டி, பெட்ரோல், டீசல் விலை உயா்வு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பின்னலாடைத் தொழில் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், பஞ்சு நூல் விலையும் தற்போது உயா்ந்து வருவதால் சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால், இந்தத் தொழிலில் ஈடுபட்டுள்ள லட்சக்கணக்கான தொழிலாளா்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது.

ஆகவே, பஞ்சை அத்தியாவசியப் பொருள்கள் பட்டியலுக்கு மாற்றம் செய்ய வேண்டும். இதன் மூலமாக பஞ்சு பதுக்கல் மற்றும் நூல் விலை உயா்வைக் கட்டுப்படுத்தி பின்னலாடைத் தொழிலாளா்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இக்கூட்டத்தில், ஏஐடியூசி பொதுச்செயலாளா் என்.சேகா், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளா் என்.ரவி, சங்கத்தின் மாவட்ட துணைச் செயலாளா் செந்தில்குமாா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com