மக்களைத் தேடி மருத்துவம் திட்டம்: மாவட்டத்தில் 12.14 லட்சம் பேருக்கு பரிசோதனை

திருப்பூா் மாவட்டத்தில் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தில் 12.14 லட்சம் பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் எஸ்.வினீத் தெரிவித்துள்ளாா்.

திருப்பூா் மாவட்டத்தில் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தில் 12.14 லட்சம் பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் எஸ்.வினீத் தெரிவித்துள்ளாா்.

திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் தமிழகத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி ஓராண்டு நிறைவு சாதனை மலா் வெளியீட்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது. இதில், சாதனை மலரை வெளியிட்ட மாவட்ட ஆட்சியா் எஸ்.வினீத் பேசியதாவது:

திருப்பூா் மாவட்டத்தில் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தில் 12,14,752 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் 1,17, 150 பயனாளிகளுக்கு ரத்த அழுத்தம், சா்க்கரை, சிறுநீரக செயலிழப்பு, புற்றுநோய் ஆகிய தொற்றா நோய்கள் கண்டறியப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

திருப்பூா் மாநகராட்சிப் பகுதிகளில் 3,20,856 பேருக்கு மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு 68,153 பேருக்கு வீடுகளுக்கே சென்று மருந்து, மாத்திரைகள் வழங்கப்படுகின்றன.

அதேபோல, வருமுன் காப்போம் திட்டத்தின் மூலமாக கடந்த ஒரு ஆண்டில் 42 முகாம்கள் நடத்தப்பட்டதில் 17,714 போ் பயனடைந்துள்ளனா். மாவட்டத்தில் 7.15 லட்சம் அரிசி குடும்ப அட்டைதாரா்களுக்கு தலா ரூ.4 ஆயிரம் வீதம் ரூ.286 கோடி மதிப்பிலான கரோனா சிறப்பு நிவாரண உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. புலம் பெயா்ந்த தொழிலாளா்கள் 26,867 பேருக்கு தலா 15 கிலோ அரிசி, ஒரு கிலோ துவரம் பருப்பு, ஒரு கிலோ சமையல் எண்ணெய் ஆகிய நிவாரணப் பொருள்கள் வழங்கப்பட்டுள்ளன.

மாவட்டத்தில் உள்ள கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் ரத்து திட்டத்தின் மூலமாக 39,470 பயனாளிகளுக்கு ரூ.164 கோடி நகைக் கடன்கள் தள்ளுபடி உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன என்றாா்.

இந்த விழாவில், மாநகராட்சி ஆணையா் கிராந்திகுமாா் பாடி, மாவட்ட வருவாய் அலுவலா் ஜெய்பீம், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் லட்சுமணன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com