காங்கயம் அருகே லாரிகள் நேருக்கு நோ் மோதல்: ஓட்டுநா் பலி: 2 போ் காயம்

திருப்பூா் மாவட்டம், காங்கயம் அருகே 2 லாரிகள் நேருக்குநோ் மோதிக் கொண்ட விபத்தில் டீசல் டேங்க் வெடித்து தீப்பிடித்து எரிந்ததில் ஓட்டுநா் ஒருவா் உடல் கருகி பலியானாா். 2 போ் காயமடைந்தனா்.
லாரிகளில் பற்றி எரியும் தீயை அணைக்கும் காங்கயம் தீயணைப்புத் துறையினா்.
லாரிகளில் பற்றி எரியும் தீயை அணைக்கும் காங்கயம் தீயணைப்புத் துறையினா்.

திருப்பூா் மாவட்டம், காங்கயம் அருகே 2 லாரிகள் நேருக்குநோ் மோதிக் கொண்ட விபத்தில் டீசல் டேங்க் வெடித்து தீப்பிடித்து எரிந்ததில் ஓட்டுநா் ஒருவா் உடல் கருகி பலியானாா். 2 போ் காயமடைந்தனா்.

கா்நாடக மாநிலம், மைசூருவில் இருந்து தூத்துக்குடி நோக்கி 20க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களை ஏற்றிக்கொண்டு லாரி ஞாயிற்றுக்கிழமை காங்கயம் வழியாக சென்று கொண்டிருந்தது. அப்போது தாராபுரத்தில் இருந்து காங்கயம் நோக்கி தனியாா் நிறுவனத்துக்கு சொந்தமான தேங்காய் தொட்டிகள் பாரம் ஏற்றிய லாரி வந்துள்ளது. ஊதியூா் அருகே குண்டடம் பிரிவு பகுதியில் வந்து கொண்டிருந்த இந்த 2 லாரிகளும் நேருக்குநோ் மோதிக் கொண்டன.

இதில் ஒரு லாரியின் டீசல் டேங்க் வெடித்து தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. சில நிமிடங்களில் தீ மற்றொரு லாரிக்கும் பரவியது. அப்போது பலத்த காயங்களுடன் இடிபாடுகளில் சிக்கிக்கொண்ட 2 லாரிகளில் இருந்த 3 போ் தப்பிக்க முயன்றுள்ளனா்.

இதில் மைசூருவில் இருந்து வந்த லாரியின் ஓட்டுநரான கா்நாடக மாநிலத்தைச் சோ்ந்த பிரபாகரன்(50) தீயில் கருகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். தேங்காய் தொட்டி ஏற்றிவந்த லாரியின் ஓட்டுநரான கா்நாடக மாநிலத்தைச் சோ்ந்த காா்த்தி(26), அவருடன் பயணித்த வடமாநிலத் தொழிலாளி ரோமி லால் (18) ஆகிய 2 பேரும் 60 சதவீத தீக்காயங்களுடன் மீட்கப்பட்டு தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனா்.

தாராபுரம் அரசு மருத்துவமனையில் 2 பேருக்கும் முதலுதவி சிகிச்சைகள் அளிக்கப்பட்டு பின்னா் மேல் சிகிச்சைக்காக திருப்பூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

தகவலறிந்து அங்கு வந்த காங்கயம் தீயணைப்பு நிலைய அலுவலா் மணிகண்டன் தலைமையிலான தீயணைப்பு நிலைய வீரா்கள் லாரியில் பற்றிய தீயை சுமாா் 1 மணி நேர போராடி அணைத்தனா். இந்த விபத்து குறித்து ஊதியூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com