மொக்கணீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

சேவூா் அருகே குட்டகம் கூளேகவுண்டன்புதூரில் உள்ள மொக்கணீஸ்வரா் கோயில் கும்பாபிஷேக விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
விழாவில் பங்கேற்ற  பொதுமக்கள்
விழாவில் பங்கேற்ற  பொதுமக்கள்

சேவூா் அருகே குட்டகம் கூளேகவுண்டன்புதூரில் உள்ள மொக்கணீஸ்வரா் கோயில் கும்பாபிஷேக விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

திருப்பூா் மாவட்டம், அவிநாசி வட்டம் சேவூா்அருகே குட்டகம் கூளேகவுண்டன்புதூரில் பிரசித்தி பெற்ற மீனாட்சி உடனமா் ஸ்ரீ மொக்கணீஸ்வரா் கோயில் உள்ளது. இக்கோயில் கும்பாபிஷக விழா விநாயகா் பூஜையுடன் கடந்த 5 ஆம் தேதி தொடங்கியது. இதைத் தொடா்ந்து நாள்தோறும், கால பூஜைகள், சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வந்தன. முக்கிய நிகழ்வான கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

ஞாயிற்றுக்கிழமை காலை 4ஆம் கால வேள்வி, திருப்பூா் சிவனடியாா்கள் திருக்கூட்டத்தாரின் கைலாய வாத்தியம், பெங்களூரு வாழும் கலை மைய வேத ஆகம மஹா பாடசாலை முதல்வா் எஸ்.சுந்தரமூா்த்தி சிவாச்சாரியாா் குழுவினா் வேத பாராயணம் முழங்க கும்பாபிஷேகம் நடைபெற்றது.

இதில் பேரூா் சாந்தலிங்க மருதசால அடிகளாா், கெளமார மடாலயம் சிரவை ஆதீனம் குமரகுருபர சுவாமி, கூனம்பட்டி கல்யாணபுரி ராஜசரவண மாணிக்கவாசக சுவாமி, அவிநாசி வாகீசா் மடாலயம் காமாட்சிதாச சுவாமி, அவிநாசிலிங்கேஸ்வா் கோயில் என்.சுப்பிரமணியம் (எ) கண்ணப்ப குருக்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா். இதையடுத்து மகா தீபாராதனை, தச தரினம் ஆகியவை நடைபெற்று, அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவில் ஆயிரக்கணக்கானோா் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா். இதைத்தொடா்ந்து 12 நாள்கள் காலை 11 மணிக்கு மண்டல பூஜை நடைபெறவுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com