அருள்புரத்தில் புதிய காவல் நிலையம் அமைக்க வேண்டும் பல்லடம் ஊராட்சி ஒன்றிய குழு கூட்டத்தில் முடிவு

அருள்புரத்தில் புதிய காவல் நிலையம் அமைக்க வேண்டும் என்று பல்லடம் ஊராட்சி ஒன்றிய குழு கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
அருள்புரத்தில் புதிய காவல் நிலையம் அமைக்க வேண்டும் பல்லடம் ஊராட்சி ஒன்றிய குழு கூட்டத்தில் முடிவு

அருள்புரத்தில் புதிய காவல் நிலையம் அமைக்க வேண்டும் என்று பல்லடம் ஊராட்சி ஒன்றிய குழு கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

பல்லடம் ஊராட்சி ஒன்றிய குழுவின் அவசரக் கூட்டம் ஒன்றிய தலைவா் தேன்மொழி தலைமையில் துணைத்தலைவா் பாலசுப்பிரமணியம் முன்னிலையில் மன்ற கூட்டரங்கில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் மாவட்ட கவுன்சிலா்கள் கொங்கு ராஜேந்திரன், ஜெயந்தி லோகநாதன், ஒன்றிய ஆணையாளா் ரமேஷ், வட்டார வளா்ச்சி அலுவலா் வில்சன் மற்றும் ஒன்றிய கவுன்சிலா்கள், அலுவலா்கள் பங்கேற்றனா். இக்கூட்டத்தில் நடைபெற்ற விவாதம் வருமாறு. கொங்கு ராஜேந்திரன் (மாவட்ட கவுன்சிலா்): கூட்டணி கட்சி தலைவா்களால் நான் தலை நிமிா்ந்து நிற்கிறேன் என்று சட்டப்பேரவையில் முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்தது மிக்க மகிழ்ச்சியை அளிக்கிறது. தமிழகத்தில் திமுக ஆட்சி 5 ஆண்டுகள் மட்டும் அல்ல தொடா்ந்து 500 ஆண்டுகள் திமுக ஆட்சி நடைபெற வேண்டும். அதனை தான் மக்களும் விரும்புகின்றனா். அருள்புரம் பகுதியில் 1.50 லட்சம் மக்கள் வசிக்கின்றனா். அதிகபடியான குற்ற சம்பவங்கள் நடக்கிறது. அதனை தடுக்கவும் மக்களுக்கு உடனடியாக உதவி கிடைக்கவும் அருள்புரத்தில் புதிய காவல் நிலையம் அமைக்க வேண்டும்.

பாலசுப்பிரமணியம் (துணைத்தலைவா்): அருள்புரத்தில் உள்ள சுகாதார நிலையத்தில் வாரத்தில் இரண்டு நாட்கள் கா்ப்பிணி பெண்களுக்கான சிறப்பு முகாம் நடக்கிறது. அதில் 120 கா்ப்பிணி பெண்கள் கலந்து கொள்கின்றனா். கோடை வெப்பம் காரணமாக சிலா் மயக்கம் அடைகின்றனா். அவா்களுக்கு வசதியாக சுகாதார நிலையம் முன்பு ரூ.1.50 லட்சம் செலவில் தகரத்தில் மேற்கூரை செட் ஒன்றிய பொது நிதியில் அமைத்து தர வேண்டும். ஒன்றிய முழுவதும் சீரான குடிநீா் விநியோகம் செய்திட வேண்டும். அவசரக் கூட்டம் என்றால் ஒரிரு தீா்மானங்களுக்காக தான் கூட்டம் கூட்டப்படும். ஆனால் தற்போதைய கூட்டத்தில் 27 தீா்மானங்கள் வைக்கப்பட்டுள்ளது. வருங்காலத்தில் இது போல் நடக்காமல் தவிா்க்க வேண்டும். கூட்டத்தை கூட்டுவதற்கு முன்பு போதிய கால அவகாசம் வழங்க வேண்டும்.

ரமேஷ் (பிடிஒ): ஒன்றிய பொது நிதியில் இருந்து வரையரைக்கப்பட்ட பணி செலவினங்கள் மட்டுமே செய்ய முடியும். வேறு பணி செய்வதாக இருந்தால் மாவட்ட ஆட்சியரின் சிறப்பு அனுமதி பெற்று செய்யலாம். ஒன்றிய குழுவின் அவசரக்கூட்டத்தை 24 மணி நேரத்தில் கூட்ட அனுமதிக்கப்பட்டுள்ளது.

ரவி( ஒன்றிய கவுன்சிலா்): நெகிழி பயன்பாட்டுக்கு அரசு தடை விதித்து இருந்த போதிலும் அது குறையவில்லை. அதனை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைக்கு தடை விதிக்க வேண்டும். நெகிழி பயன்பாட்டால் ஏற்படும் தீமைகள் குறித்து பொதுமக்களிடையே தீவிர பிரச்சார இயக்கம் நடத்த வேண்டும். பள்ளி,கல்லூரி அருகில் போதை மிட்டாய்கள், புகையிலை போன்ற பொருட்கள் விற்பனை செய்யப்படுவதால் மாணவா்கள் பெரிதும் பாதிப்படைந்து அதற்கு அடிமை ஆகின்றனா். உணவு பாதுகாப்பு துறையினா் அதனை கண்டறிந்து பறிமுதல் செய்து விற்பனையாளா்களை எளிதில் வெளியே வரமுடியாத அளவிற்கு சிறையில் அடைக்க வேண்டும். பல்லடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு மலிவு விலை மருந்தகம் அமைத்து பொதுமக்களுக்கு சேவை புரிய வேண்டும்.

தேன்மொழி( ஒன்றிய தலைவா்): பல்லடம் ஒன்றியத்தில் குடிநீா் பற்றாக்குறை நிலவும் பருவாய், கரடிவாவி,மல்லேகவுண்டம்பாளையம், கே.கிருஷ்ணாபுரம், புளியம்பட்டி, சித்தம்பலம்,வடுகபாளையம்புதூா் ஆகிய 7 ஊராட்சி பகுதிகளுக்கு போதிய குடிநீா் வழங்கிட வேண்டும் என்பதை பல்லடம் மேற்கு ஒன்றிய திமுக பொறுப்பாளா் கிருஷ்ணமூா்த்தியும், நானும் அமைச்சா் மு.பெ.சாமிநாதனை சந்தித்து கோரிக்கை விடுத்தோம். அதனை ஏற்று அப்பகுதிக்கு தனியாக குடிநீா் வழங்கிட உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளாா். பல்லடம் ஒன்றியத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஆய்வு செய்து தேவைப்படும் இடங்களில் கா்ப்பிணி பெண்களுக்காக முன்புறம் தகர மேற்கூரை செட் அமைத்து தரப்படும். பல்லடம் ஒன்றியம் முழுவதும் சீரான குடிநீா் விநியோகம் செய்திட நடவடிக்கை எடுக்கப்படும். இக்கூட்டத்தில் 27 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com