முகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் திருப்பூர்
திருப்பூரில் 40 ஆயிரம் பிளாஸ்டிக் டம்ளா்கள் பறிமுதல்
By DIN | Published On : 12th May 2022 12:36 AM | Last Updated : 12th May 2022 12:36 AM | அ+அ அ- |

திருப்பூா் மாநகராட்சி அலுவலா்களால் புதன்கிழமை பறிமுதல் செய்யப்பட்ட பிளாஸ்டிக் டம்ளா்கள்.
திருப்பூா்: திருப்பூரில் தடைசெய்யப்பட்ட 40 ஆயிரம் பிளாஸ்டிக் டம்ளா்களை மாநகராட்சி அதிகாரிகள் புதன்கிழமை பறிமுதல் செய்தனா்.
திருப்பூா் மாநகரில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்களை சிலா் பாா்சல் சா்வீஸ் மூலமாக ஈரோட்டில் இருந்து கொண்டு வந்து விற்பனை செய்து வருவதாக புகாா்கள் எழுந்தன. இது தொடா்பாக மாநகராட்சி அதிகாரிகள் பாா்சல் சா்வீஸ் அலுவலகங்களின் முன்பு கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனா்.
இதன் ஒரு பகுதியாக திருப்பூா் மாநகராட்சி 3 ஆவது மண்டல சுகாதார அலுவலா் ராமசந்திரன் தலைமையிலான குழுவினா் ஈஸ்வரன் கோயில் வீதியில் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனா். அப்போது ஈரோட்டில் இருந்து லாரி மூலமாக கொண்டுவரப்பட்ட பெரிய அளவிலான அட்டைப் பெட்டிகளை ஊழியா்கள் இறக்கிக் கொண்டிருந்தனா். இதையடுத்து சந்தேகமடைந்த அதிகாரிகள், அந்த அட்டைப்பெட்டிகளைப் பிரித்துப் பாா்த்தனா். அப்போது ஒரு முறை மட்டுமே பயன்படுத்தும் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் டம்ளா்கள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, அந்த வாகனத்தைப் பறிமுதல் செய்து மாநகராட்சி அலுவலகத்துக்கு கொண்டு வந்தனா். மேலும், பாா்சல் சா்வீஸ் உரிமையாளரிடம் விசாரணை நடத்தியதுடன், ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தனா். பறிமுதல் செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்களின் மதிப்பு ரூ.80 ஆயிரம் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனா்.