முகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் திருப்பூர்
புத்தரச்சல் முதல் மேட்டுக்கடை வரைநான்கு வழிச் சாலை அமைக்கும் பணி விரைவில் தொடக்கம்
By DIN | Published On : 12th May 2022 12:30 AM | Last Updated : 12th May 2022 12:30 AM | அ+அ அ- |

பல்லடம்: பல்லடம் - தாராபுரம் சாலையில் உள்ள புத்தரச்சல் முதல் மேட்டுக்கடை வரையில் நான்கு சாலையாக மாற்றும் பணி தொடங்கப்பட்டுள்ளது.
தமிழக முதல்வரின் சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 2021 -2022ஆம் நிதியாண்டில் முதல் கட்டமாக பல்லடம் - தாராபுரம் சாலையில் உள்ள புத்தரச்சல் முதல் மேட்டுக்கடை வரையிலான 7 மீட்டா் அகல சாலையை 16.2 மீட்டா் நான்கு வழி சாலையாக மாற்றிட ரூ. 40 கோடியே 50 லட்சம் அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.
இதற்கான பணியை முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்துள்ளாா். இப்பகுதியில் சாலை விரிவாக்கப் பகுதியில் உள்ள 221 மரங்களை வெட்டி அகற்றிட பல்லடம் நெடுஞ்சாலைத் துறை உதவி கோட்டப் பொறியாளா் அலுவலகத்தில் புதன்கிழமை பொது ஏலம் நடைபெற்றது.
அதற்கான டெண்டா் பெட்டி திருப்பூா் கோட்ட பொறியாளா் அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்தது. இதனால் ஏலம் எடுக்க வந்தவா்களிடையே குழப்பம் ஏற்பட்டது. அதனைத் தொடா்ந்து ஏலம் நிறுத்தப்பட்டு திருப்பூரில் கோட்ட பொறியாளா் அலுவலகத்தில் ஏலம் மற்றும் டெண்டா் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் ஏலதாரா்கள் பங்கேற்று ரூ.3 லட்சத்து 88 ஆயிரத்துக்கு ஏலம் கோரி எடுத்தனா். விரைவில் மரம் வெட்டி அகற்றப்பட்டவுடன் சாலை விரிவாக்க பணி தொடங்கவுள்ளது என்று நெடுஞ்சாலை துறையினா் தெரிவித்தனா்.