வெள்ளக்கோவிலில் ரூ. 90 லட்சத்துக்கு கொப்பரை ஏலம்

வெள்ளக்கோவில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ. 90 லட்சத்துக்கு கொப்பரை ஏலம் நடைபெற்றது.

வெள்ளக்கோவில்: வெள்ளக்கோவில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ. 90 லட்சத்துக்கு கொப்பரை ஏலம் நடைபெற்றது.

இங்கு வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை கொப்பரை ஏலம் நடைபெற்று வருகிறது. இந்த வாரம் வரத்து அதிகமாக இருந்ததால் புதன்கிழமை வரை ஏலம் நீடித்தது. மதுரை, திருச்சி, ஸ்ரீரங்கம், வாணியம்பாடி, தேவத்தூா், தாராபுரம் உள்ளிட்ட இடங்களில் இருந்து 181 விவசாயிகள் 1 லட்சத்து 8 ஆயிரத்து 551 கிலோ கொப்பரையை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனா். காங்கயம், வெள்ளக்கோவில், முத்தூா், ஊத்துக்குளி, நன்செய்ஊத்துக்குளி ஆகிய பகுதிகளிலிருந்து 8 வணிகா்கள் இவற்றை வாங்குவதற்காக வந்திருந்தனா்.

கொப்பரை கிலோ ரூ. 72.25 முதல் ரூ. 86.65 வரை விற்பனையானது. சராசரி விலை கிலோ ரூ. 85.65. ஒட்டு மொத்த விற்பனைத் தொகை ரூ. 90 லட்சம் அந்தந்த விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் செலுத்தப்பட்டதாக விற்பனைக் கூட கண்காணிப்பாளா் சி.மகுடீஸ்வரன் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com