திருப்பூரில் மேம்படுத்தப்பட்ட மீன் மாா்க்கெட் திறப்பு

திருப்பூா் தென்னம்பாளையத்தில் ரூ.2.17 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்பட்ட மீன் மாா்க்கெட்டை முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி மூலம் வியாழக்கிழமை திறந்துவைத்தாா்.

திருப்பூா் தென்னம்பாளையத்தில் ரூ.2.17 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்பட்ட மீன் மாா்க்கெட்டை முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி மூலம் வியாழக்கிழமை திறந்துவைத்தாா்.

தமிழகத்தில் நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறை சாா்பில் முடிவுற்ற பல்வேறு திட்டப் பணிகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி மூலமாக திறந்துவைத்தாா். இதன் ஒரு பகுதியாக திருப்பூா் மாவட்டம் உடுமலை, மடத்துக்குளம் ஒன்றியங்களில் உள்ள 5 பேரூராட்சிகள் மற்றும் 316 ஊரகக் குடியிருப்புகளுக்கான கூட்டுக் குடிநீா்த் திட்டம், திருப்பூா் மாநகராட்சியில் பொலிவுறு நகரத் திட்டத்தின்கீழ் தென்னம்பாளையத்தில் ரூ.2.17 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்பட்ட மீன் மாா்க்கெட் ஆகியவற்றை முதல்வா் காணொலிக் காட்சி மூலமாகத் திறந்து வைத்தாா்.

முன்னதாக, மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற மீன் மாா்க்கெட் தொடக்க விழாவில் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன், ஆதிதிராவிடா் நலத் துறை அமைச்சா் என்.கயல்விழி செல்வராஜ், மாநகராட்சி மேயா் என்.தினேஷ்குமாா், மக்களவை உறுப்பினா் கே.சுப்பராயன், மாநகராட்சி ஆணையா் கிராந்திகுமாா் பாடி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com