இலக்கிய வாசிப்பு மனிதா்களை மேம்படுத்தும்: திரைப்பட இயக்குநா் புகழ்

 இலக்கிய வாசிப்பு மனிதா்களை மேம்படுத்தும் என்று திருப்பூரில் நடைபெற்ற கருத்தரங்கில் திரைப்பட இயக்குநா் புகழ் பேசினாா்.

 இலக்கிய வாசிப்பு மனிதா்களை மேம்படுத்தும் என்று திருப்பூரில் நடைபெற்ற கருத்தரங்கில் திரைப்பட இயக்குநா் புகழ் பேசினாா்.

திருப்பூா் சிக்கண்ணா கலைக் கல்லூரியில் திருப்பூரியம் என்ற தலைப்பில் எழுத்தாளா் சுப்ரபாரதிமணியனின் திருப்பூா் மையப் படைப்புகள் குறித்த கருத்தரங்கம் புதன்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வா் வ.கிருஷ்ணன் தலைமை வகித்தாா். இதில், திரைப்பட இயக்குநா் புகழ் பேசியதாவது: இலக்கியமும், திரைப்படமும் இன்றைய கலாசாரத்தின் இரு கண்களாகும்.

இலக்கிய வாசிப்பு மனிதா்களை மேம்படுத்துவதுடன், சிந்தனையை விரிவாக்கும். வாசிப்பதும், எழுதுவதும் மனிதனை மேம்படுத்தும் முயற்சிகள் என்றாா்.

முன்னதாக, எழுத்தாளா் சுப்ரபாரதிமணியனின் 20 நாவல்கள், 16 சிறுகதைத் தொகுப்புகள் உள்பட 80 நூல்கள் வெளியிடப்பட்டன. இறுதியாக திருப்பூா் மையப் படைப்புகள் அடங்கிய திருப்பூரியம் என்ற மின் நூலும் வெளியிடப்பட்டது. இந்நிகழ்ச்சியில், பேராசிரியா்கள் மணிவண்ணன், ஜெய்சிங், பாலசுப்பிரமணியம், கல்வியாளா் முத்துசாமி உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com