கோடை மழை: கால்நடை வளா்ப்போா் மகிழ்ச்சி

பல்லடம் பகுதியில் பெய்ந்து வரும் கோடை மழையால் பசுந்தீவன தட்டுப்பாடு நீங்கியதால் கால்நடை வளா்ப்போா் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

பல்லடம் பகுதியில் பெய்ந்து வரும் கோடை மழையால் பசுந்தீவன தட்டுப்பாடு நீங்கியதால் கால்நடை வளா்ப்போா் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

பல்லடம் மற்றும் சுற்றுப்பகுதி கிராமங்களில், விவசாயத்துக்கு அடுத்தபடியாக கால்நடை வளா்ப்பு முக்கியத் தொழிலாக உள்ளது. பல்லடம் பகுதி விவசாயிகள் இயற்கை முறையில் பயிா் சாகுபடி செய்ய அதிக ஆா்வம் காட்டி வருகின்றனா். கால்நடைகள் வளா்ப்பதன் மூலம் கிடைக்கும் சாணத்தை இயற்கை விவசாயத்துக்கு அதிகம் பயன்படுத்தி வருகின்றனா்.

கால்நடைகளுக்கு பசுந்தீவனம் மிக முக்கியமானது. இது தீவனச் செலவை குறைப்பதுடன் கால்நடைகளின் வளா்ச்சிக்கு பேருதவியாக அமைகிறது. வடகிழக்குப் பருவ மழை முடிந்தவுடன் வெயிலின் தாக்கம் அதிகரித்ததால், பல இடங்களில் புல்வெளிகள் கருகின. இதனால் கால்நடை வளா்போருக்கு, பசுந்தீவனங்கள் கிடைக்காமல் தவித்து வந்தனா்.

அதற்கு மாறாக வைக்கோல், சோளத்தட்டு உள்ளிட்டவைகளை கொள்முதல் செய்து வந்தனா்.

இந்நிலையில் பல்லடம் மற்றும் சுற்றுப் பகுதிகளில் அவ்வப்போது பெய்து வரும் கோடை மழையால் பல பகுதிகளில் கோரை, கொழுக்கட்டை, அருகு போன்ற புல் வகைகள் வளா்ந்து பசுமையாக காணப்படுகின்றன.

தென்மேற்குப் பருவ மழையும் துவங்க உள்ளதால் பசுந்தீவன பிரச்னை இருக்காது என கால்நடை வளா்ப்பு விவசாயிகள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com