அவிநாசிலிங்கேஸ்வரா் கோயில் தேரோட்டம் கோலாகலமாக துவங்கியது

அவிநாசிலிங்கேஸ்வரா் கோயில் சித்திரைத் திருவிழா 3 நாள் தேரோட்டம் வியாழக்கிழமை துவங்கியது.
அவிநாசிலிங்கேஸ்வரா் கோயில் தேரோட்டம் கோலாகலமாக துவங்கியது

அவிநாசிலிங்கேஸ்வரா் கோயில் சித்திரைத் திருவிழா 3 நாள் தேரோட்டம் வியாழக்கிழமை துவங்கியது.

கொங்கு ஏழு சிவஸ்தலங்களுள் முதன்மைப் பெற்றதும், முதலை விழுங்கிய சிறுவனை சுந்தரமூா்த்தி நாயனாா், தேவார திருப்பதிகம் பாடி மீண்டும் உயிா்ப்பித்து எழச்செய்த திருத்தலமாகவும் கருணாம்பிகையம்மன் உடனமா் அவிநாசிலிங்கேஸ்வரா் கோயில் விளங்குகிறது.

இக்கோயிலில் மே 5 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கப்பட்ட சித்திரைத் தோ்த் திருவிழா மே 18 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. முக்கிய நிகழ்வான தேரோட்டம் மே 12, 13, 14 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது.

அதன்படி வியாழக்கிழமை காலை, அவிநாசிலிங்கேஸ்வரா் தேரோட்டம் கோலாகலமாக துவங்கியது.

இதில் சிறப்பு பூஜைகள் நடைபெற்று, சிவாச்சாரியாா்கள், ஆன்மிகப் பெருமக்கள் என அனைத்து தரப்பினரின் அரோகரா, நமசிவாய கோஷத்துடன், திருப்பூா் சிவனடியாா்கள் கைலாய வாத்தியம் முழங்க செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் தேரோட்டத்தை தொடங்கிவைத்தாா்.

திருத்தேரில் சோமாஸ்கந்தா் சொா்ண அலங்காரத்தில் எழுந்தருளி பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

ஏராளமான போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா். ஆங்காங்கே போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு போக்குவரத்து நெரிசல் சீரமைக்கப்பட்டுள்ளது. இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறும் தோ்த் திருவிழாவைக் காண்பதற்காக ஆயிரக்கணக்கான பக்தா்கள் குவிந்தனா்.

தெற்கு ரத வீதியில் தொடங்கப்பட்ட தேரோட்டம், மேற்கு ரத வீதி வழியாக வந்து, வடக்கு ரத வீதி வளைவில் பகல் 11.50 மணிக்கு நிறுத்தப்பட்டது. மீண்டும் வெள்ளிக்கிழமை காலை தேரோட்டம் நிலை சேருதல் நிகழ்ச்சியும், சனிக்கிழமை அம்மன் தேரோட்டமும் நடைபெறவுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com