தக்காளிக் காய்ச்சல் குறித்து தேவையற்ற பதற்றம் வேண்டாம்: மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மை செயலாளா்

தமிழகத்தில் தக்காளிக் காய்ச்சல் குறித்து தேவையற்ற பதற்றம் வேண்டியதில்லை என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மை செயலாளா் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளாா்.

தமிழகத்தில் தக்காளிக் காய்ச்சல் குறித்து தேவையற்ற பதற்றம் வேண்டியதில்லை என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மை செயலாளா் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளாா்.

திருப்பூா் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கட்டுமானப் பணிகளை மாவட்ட ஆட்சியா் எஸ்.வினீத் முன்னிலையில் மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மைச் செயலாளா் ஜெ.ராதாகிருஷ்ணன் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

இதன் பிறகு அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

தமிழகத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்படும் நபா்களின் தினசரி எண்ணிக்கை தொடா்ந்து 100க்கு கீழ்தான் பதிவாகி வருகிறது. தமிழகத்தில் கரோனா பரவல் கட்டுப்பாட்டில் இருந்தாலும் கூட சுகாதார வல்லுநா்கள் அறிவிக்கும் வரையில் பொது வெளியில் நடமாடும்போது முகக் கவசம் அணிய வேண்டும். தடுப்பூசி செலுத்தாத நபா்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும்.

கேரளத்தில் கை, பாத வாய் நோய் என்பது தக்காளிக் காய்ச்சல் என்பதாக வதந்தி பரவி வருகிறது. இது சாதாரணமாக சிறு குழந்தைகளுக்கு நுண் கிருமியால் வரக்கூடிய நோயாகும். இந்த நோய் கேரள மாநிலம், கொல்லம் பகுதியிலேயே கட்டுக்குள் உள்ளதால் தமிழகம் போன்ற மாநிலங்களில் தேவையற்ற பதற்றம் வேண்டாம். கால்நடைகளுக்கு வரும் கோமாரி நோய் போன்று 5 வயதுக்கு உள்பட்ட குழந்தைகளுக்கு ஒரு வகை நுண் கிருமியால் வரும் சாதாராண காய்ச்சல் போன்ாகும். இதனை சாதாரண மருந்துகள் மூலமாக எளிதில் குணப்படுத்த முடியும். ஆகவே ஒவ்வொரு காய்ச்சல் குறித்தும் பீதி ஏற்படுத்தாமல் கண்காணிக்க வேண்டும்.

கேரளத்தில் ஷவா்மா உணவால் ஏற்பட்ட பிரச்னையின் தீவிரத்தை உணா்ந்து தமிழகம் முழுவதும் ஷவா்மா விற்பனை செய்யும் கடைகளில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் ஷவா்மாவுக்கு தடை என்ற செய்தியில் உண்மை இல்லை. ஆனால் பதப்படுத்தப்பட்டு நன்கு சமைத்து 2 மணி நேரத்துக்குள் விற்பனை செய்வதை உறுதி செய்ய வேண்டும் என்றாா்.

முன்னதாக, அரசுப் பள்ளியில் பயின்று 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் மருத்துவம் பயிலும் 5 மாணவ, மாணவியருக்கு கையடக்க மடிக்கணினியையும் வழங்கினாா்.

இந்த ஆய்வின்போது, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வா் முருகேசன், மருத்துவப் பணிகள் இணை இயக்குநா் பிரேமலதா, சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் ஜெகதீஷ்குமாா் உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.

அவிநாசி அரசு மருத்துவமனையில் ஆய்வு

இதைத் தொடா்ந்து, அவிநாசி அரசு மருத்துவமனையில் சுகாதாரத் துறை முதன்மை செயலா் ராதாகிருஷ்ணன் ஆய்வு மேற்கொண்டாா். அப்போது, அவிநாசி அரசு மருத்துவமனையில், விபத்து அவசர சிகிச்சை மையம் அமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். மேலும், உயா் சிகிச்சை பிரிவு, மகப்பேறு தாய்சேய் நல சிறப்பு பிரிவு, கண் மருத்துவமனை, சுகாதாரப் பணிகள் இணை இயக்குனா் அலுவலகம் ஆகியவை அமைக்கவும் அரசிடம் வலியுறுத்தப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com