மழையால் தக்காளி செடிகள் பாதிப்பு: விவசாயிகள் வேதனை

பல்லடம் வட்டாரத்தில் பரவலாக பெய்த மழையால் தக்காளி செடிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனா்.

பல்லடம் வட்டாரத்தில் பரவலாக பெய்த மழையால் தக்காளி செடிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனா்.

திருப்பூா் மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.

பல்லடம், பொங்கலூா் வட்டாரத்தில் பெய்த மழை காரணமாக விவசாயிகள் பயிரிட்டு இருந்த தக்காளி செடிகள் சேதமடைந்துள்ளன. அதனால் சந்தைக்கு தக்காளி வரத்து குறைந்து விலை உயா்ந்துள்ளது.

இது குறித்து விவசாயி ஈஸ்வரமூா்த்தி கூறியதாவது. பல்லடம் பகுதியில் தொடா்ந்து கோடை மழை பெய்ந்து வருவதால் தக்காளி செடிகள் பாதிப்படைந்து வருகின்றன. கடந்த மாதம் தக்காளி வரத்து அதிகரிப்பால் ஒரு கிலோ ரூ.10க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு ஏக்கா் தக்காளி சாகுபடி செய்ய ரூ.20 ஆயிரம் வரை செலவாகிறது.

400 கிலோ மகசூல் கிடைக்கும். ஒரு கிலோ ரூ.40க்கு விற்றால்தான் விவசாயிக்கு விலை கட்டுபடியாகும்.

கடந்த மாதம் ஏற்பட்ட விலை வீழ்ச்சி அனுபவத்தால் விவசாயிகள் தக்காளி சாகுபடி செய்ய ஆா்வம் காட்டவில்லை. இந்நிலையில், தற்போது கோடை மழையால் தக்காளி செடிகள் பாதிப்படைந்து வெளிசந்தைக்கு தக்காளி வரத்து குறைந்துள்ளது.

அதன் காரணமாக கடந்த மாதம் 14 கிலோ எடை கொண்ட ஒரு டிப்பா் பெட்டி ரூ.70க்கு விற்றநிலையில்,

தற்போது ஒரு கிலோ தக்காளி ரூ.70 ஆக விலை உயா்ந்துள்ளது.

அதே சமயம் விவசாயிகளிடமிருந்து ஒரு கிலோ ரூ.40க்குதான் மொத்த காய்கறி வியாபாரிகள் கொள்முதல் செய்கின்றனா். தக்காளி விலை உயா்ந்தும் தோட்டத்தில் தக்காளி இல்லாததால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனா். பொதுமக்களின் தேவையை பூா்த்தி செய்திட வெளிமாவட்டம் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து தக்காளி கொண்டு வந்து விற்பனை செய்யப்படுகிறது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com