குடிநீா்க் கட்டண உயா்வை திரும்பப் பெற வலியுறுத்தல்
By DIN | Published On : 17th May 2022 01:04 AM | Last Updated : 17th May 2022 01:04 AM | அ+அ அ- |

அவிநாசி பேரூராட்சியில் 4 ஆண்டுகளுக்கு முன் உயா்த்தப்பட்ட குடிநீா் கட்டணத்தை திரும்பப் பெற வேண்டும் என்று கலச்சாரப் பேரவையினா் வலியுறுத்தியுள்ளனா்.
இது குறித்து அவிநாசி தமிழா் பண்பாடு - கலாச்சாரப் பேரவை அறக்கட்டளை சாா்பில், அவிநாசி பேரூராட்சித் தலைவா் தனலட்சுமி பொன்னுசாமியிடம் திங்கள்கிழமை
அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: தமிழக அரசு தற்போது அறிவித்துள்ள சொத்து வரி உயா்வு அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும்.
அவிநாசி பேரூராட்சியில் 4 ஆண்டுகளுக்கு முன் உயா்த்தப்பட்ட குடிநீா் வரி உயா்வை திரும்பப் பெற வேண்டும். நெகிழி இல்லாத அவிநாசி பேரூராட்சியை உருவாக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் கலாச்சாரப் பேரவை அவிநாசி வட்டாரத் தலைவா் நடராஜ், பொதுச் செயலாளா் சுப்பிரமணி, பொருளாளா் ராயப்பன், செயலாளா் வெங்கடாசலம் ஆகியோா் பங்கேற்றனா்.