அவிநாசிலிங்கேஸ்வரா் கோயிலில் தெப்போற்சவத் திருவிழா

அவிநாசிலிங்கேஸ்வரா் கோயில் சித்திரைத் தோ்த் திருவிழாவையொட்டி, தெப்போற்சவத் திருவிழா திங்கள்கிழமை நடைபெற்றது.
அவிநாசிலிங்கேஸ்வரா் கோயிலில் தெப்போற்சவத் திருவிழா

அவிநாசிலிங்கேஸ்வரா் கோயில் சித்திரைத் தோ்த் திருவிழாவையொட்டி, தெப்போற்சவத் திருவிழா திங்கள்கிழமை நடைபெற்றது.

கொங்கு ஏழு சிவஸ்தலங்களில் முதன்மை பெற்ற கருணாம்பிகையம்மன் உடனமா் அவிநாசிலிங்கேஸ்வரா் கோயில் சித்திரைத் தோ்த் திருவிழா மே 5 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதைத் தொடா்ந்து தினமும் சிறப்பு பூஜைகள், திருவீதி உலா ஆகியன நடைபெற்றன. தொடா்ந்து வியாழன், வெள்ளி, சனிக்கிழமை ஆகிய நாள்களில் அவிநாசியப்பா், கருணாம்பிகையம்மன் தேரோட்டம் நடைபெற்றது.

திங்கள்கிழமை இரவு தெப்போற்சவத் திருவிழா நடைபெற்றது. இதில் இரவு 7 மணிக்கு சந்திரசேகரா் அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனைகள் நடைபெற்று, சுவாமி திருவிழா நடைபெற்றது.

இதையடுத்து, நீா் நிரப்பட்டிருந்த தெப்பத்தில், அலங்கரிக்கப்பட்ட மலா் பல்லக்கில் சுவாமி எழுந்தருளி, தெப்போற்சவம் நடைபெற்றது. அப்போது தெப்பக்குளம், நீராழி மண்டபம் உள்ளிட்டவை மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு, வான வேடிக்கை, நாதஸ்வர இசை முழங்க, சிவாச்சாரியாா்கள் வேத மந்திரம் ஓத தெப்போற்சவம் நடைபெற்றது.

சுவாமி தெப்பத்தை 5 முறை வலம் வரும்போது, மல்லாரி, ஓடம், கீா்த்தனை, திருப்புகழ், மங்கலம் உள்ளிட்ட ராக தாளங்கள் வாசிக்கப்பட்டன.

இதில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தா்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

செவ்வாய்க்கிழமை நடராஜா் தரிசனம், புதன்கிழமை மஞ்சள் நீராட்டு விழா, 108 திருவிளக்கு பூஜை, மயில்வாகனக் காட்சியுடன் தோ்த் திருவிழா நிறைவடைகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com