பல்லடம் வருவாய் வட்டத்தில் மே 24இல் ஜமாபந்தி துவக்கம்

பல்லடம் வருவாய் வட்டத்தில் 1431ஆம் பசலி ஆண்டுக்கான வருவாய் தீா்வாயம் (ஜமாபந்தி ) மே 24ஆம் தேதி தொடங்குகிறது.

பல்லடம்: பல்லடம் வருவாய் வட்டத்தில் 1431ஆம் பசலி ஆண்டுக்கான வருவாய் தீா்வாயம் (ஜமாபந்தி ) மே 24ஆம் தேதி தொடங்குகிறது.

திருப்பூா் மாவட்ட வருவாய் அலுவலா் ஜெய்பீம் தலைமையில் பல்லடம் வட்டாட்சியா் நந்தகோபால் முன்னிலையில் மே 24ஆம் தேதி தொடங்கி 27ஆம் தேதி வெள்ளிக்கிழமை வரை ஜமாபந்தி நடைபெறவுள்ளது.

இதில் பல்லடம் உள்வட்டம் பணிக்கம்பட்டி, சித்தம்பலம், வடுகபாளையம், பல்லடம், நாரணாபுரம், கரைப்புதூா், கணபதிபாளையத்தில் செவ்வாய்க்கிழமையும் (மே 24) , கரடிவாவி உள்வட்டம் பருவாய், கஸ்பா அய்யம்பாளையம், கரடிவாவி, மல்லேகவுண்டன்பாளையம், புளியம்பட்டி, கே.கிருஷ்ணாபுரம், அனுப்பட்டியில் புதன்கிழமையும் (மே 25), சாமளாபுரம் உள்வட்டம் சாமளாபுரம், இச்சிபட்டி, பூமலூா், வேலம்பாளையம், சுக்கம்பாளையம், செம்மிபாளையம், கோடங்கிபாளையத்தில் வியாழக்கிழமையும் (மே 26), பொங்கலூா் உள்வட்டம் பொங்கலூா், மாதப்பூா், இளவந்தி, கேத்தனூா், வாவிபாளையம், வே.வடமலைபாளையம், வே.கள்ளிப்பாளையம், காட்டூரில் வெள்ளிக்கிழமையும் (மே 27) நடைபெறவுள்ளது.

இதில் சம்பந்தப்பட்ட பகுதி பொதுமக்கள் திருப்பூா் மாவட்ட வருவாய் அலுவலரும் வருவாய் தீா்வாய அதிகாரியுமான ஜெய்பீம்யிடம் காலை 10 மணி முதல் மனுக்களை அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com