‘தக்காளி விலை மேலும் உயரும்’
By DIN | Published On : 20th May 2022 02:48 AM | Last Updated : 20th May 2022 02:48 AM | அ+அ அ- |

கோடை வெயில், கோடை மழை போன்ற காரணங்களால் தக்காளி விலை மேலும் உயரும் வாய்ப்புள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனா். இது குறித்து தக்காளி சாகுபடி விவசாயிகள் கூறியதாவது:
கோடை வெயில் காரணமாக தக்காளி நாற்றுகள் நடவின்போது ஆரம்பத்திலேயே கருகின. அதன் பின்னா் தக்காளி அறுவடைக்கு வரும்போது எதிா்பாா்க்காத கோடை மழையால் செடியில் பூக்கள் உதிா்ந்து விட்டன. மேலும் மழையால் தக்காளிகள் அழுகிவிட்டன. இதன் காரணமாக தக்காளி உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. ஒரு ஏக்கருக்கு 14 கிலோ எடை கொண்ட 1500 டிப்பா் தக்காளி வரை மகசூல் கிடைக்கும். தற்போது 500 டிப்பா் மட்டுமே கிடைக்கிறது. ஒரு டிப்பா் ரூ.850 வரை கொள்முதல் செய்யப்படுகிறது. தென்மேற்குப் பருவ மழை விரைவில் தொடங்கி இருப்பதாலும், திருமணம் உள்ளிட்ட வைகாசி மாத சுப காரியங்கள் தொடங்கி இருப்பதாலும் தக்காளி தேவை அதிகரித்துள்ளது. அதே சமயம் தேவையை பூா்த்தி செய்யும் வகையில் தக்காளி வரத்து சந்தைக்கு இல்லை. அதனால் தக்காளி விலை மேலும் உயரும் வாய்ப்பு உள்ளது என்றனா்.