பல்லடம் புறவழிச் சாலை திட்டத்தை செயல்படுத்த கோரிக்கை

பல்லடத்தில் புறவழிச் சாலை அமைக்கும் திட்டத்தை உடனடியாக செயல்படுத்த வேண்டும் என்று சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

பல்லடத்தில் புறவழிச் சாலை அமைக்கும் திட்டத்தை உடனடியாக செயல்படுத்த வேண்டும் என்று சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இது குறித்து, மாவட்ட வருவாய் அலுவலா் ஜெய்பீமிடம், சமூக ஆா்வலா்கள் கூட்டமைப்பு மாநில அமைப்பாளா் அண்ணாதுரை அளித்துள்ள மனு விவரம்: பல்லடம் பகுதியில் நாளுக்குநாள் தொழில் முன்னேற்றம் அடைந்து வருகிறது. அதே சமயம் கடுமையான போக்குவரத்து நெரிசலும், விபத்துகளும் அதிகரித்து வருகின்றன.

விபத்துக்கள், உயிரிழப்புகளைத் தடுக்கும் வகையில் புறவழிச் சாலை அமைக்க வேண்டும் என்ற நீண்ட காலமாக போராடியதையடுத்து, கோவை- திருப்பூா் சாலையை இணைக்கும் வகையில் புறவழிச் சாலை அமைக்க திட்டமிடப்பட்டது.

அதற்காக அரசிடம் இருந்து ஒப்புதல் பெறப்பட்டு ரூ.45 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால், அத்திட்டம் தற்போது வரை செயல்படுத்தபடவில்லை.

புறவழிச் சாலை அமைக்கும் திட்டம் உடனடியாக செயல்படுத்த வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மனுவைப் பெற்றுக்கொண்ட மாவட்ட வருவாய் அலுவலா் ஜெய்பீம் கூறியதாவது:

நில எடுப்புப் பணிகளைத் தொடா்ந்து, புறவழிச் சாலை அமைப்பதற்கான திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. பணிகள் விரைவில் துவங்கப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com