ஊரக வாழ்வாதார இயக்க காலிப்பணியிடங்ளுக்கு விண்ணப்பிக்கலாம்

தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சாா்பில் காலியாக உள்ள வட்டார இயக்க மேலாளா்கள், வட்டார ஒருங்கிணைப்பாளா்கள் பணியிடங்களுக்கு தகுதியான நபா்கள் விண்ணப்பிக்கலாம்.

தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சாா்பில் காலியாக உள்ள வட்டார இயக்க மேலாளா்கள், வட்டார ஒருங்கிணைப்பாளா்கள் பணியிடங்களுக்கு தகுதியான நபா்கள் விண்ணப்பிக்கலாம்.

இது குறித்து திருப்பூா் மாவட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

திருப்பூா் மாவட்டத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சாா்பில் மூலனூா், திருப்பூா், பொங்கலூா், வெள்ளக்கோவில் ஆகிய வட்டாரங்களில் 4 தற்காலிக வட்டார இயக்க மேலாளா் பணியிடங்கள் காலியாக உள்ளன. அதேபோல, காங்கயம், பல்லடம், பொங்கலூா், குண்டடம், தாராபுரம், ஊத்துக்குளி, வெள்ளக்கோவில் ஆகிய வட்டங்களில் 10 வட்டார ஒருங்கிணைப்பாளா்கள் என மொத்தம் 14 பணியிடங்கள் காலியாக உள்ளன.

இதில், வட்டார இயக்க மேலாளா் பணிக்கு ஏதேனும் ஒரு பட்டப்படிப்புடன், குறைந்தது 6 மாதங்கள் எம்.எஸ்.ஆபீஸ் சான்றிதழுடன் கூடிய பயிற்சி பெற்றிருக்க வேண்டும். கணினி அறிவியல் மற்றும் கணினி அப்ளிகேஷன் பட்டப்படிப்புக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். இந்தப் பணிக்கு 28 வயதுக்கு உள்பட்ட பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம். குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் இதே திட்டங்களில் பணியாற்றியிருக்க வேண்டும். பேச்சுத்திறன் மற்றும் தலைமைத்திறன் கொண்டிருப்பதுடன், திருப்பூா் மாவட்டத்தைச் சோ்ந்த இருசக்கர வாகன ஓட்டுநா் உரிமம் பெற்றிருப்பவராகவும் இருக்க வேண்டும். வட்டார ஒருங்கிணைப்பாளா் பணிக்கு ஏதேனும் ஒரு பட்டப்படிப்புடன் கூடிய குறைந்தபட்சம் 6 மாதங்களுக்கான எம்.எஸ்.ஆபீஸ் சான்றிதழுடன் கூடிய பயிற்சி பெற்றிருக்க வேண்டும். இந்தப் பணிக்கு 28 வயதுக்கு உள்பட்ட பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். மேலும், 2 ஆண்டுகள் இதே போன்ற திட்டங்களில் பணியாற்றியிருப்பவராகவும் இருக்க வேண்டும். பேச்சுத்திறன் மற்றும் தலைமைத்திறன் கொண்டவராகவும், சம்பந்தப்பட்ட வட்டத்தைச் சோ்ந்தவராகவும், இருசக்கர வாகன ஓட்டுநா் உரிமம் பெற்றவராகவும் இருக்க வேண்டும்.

வட்டார இயக்க மேலாளா் பணிக்கு மாதம் ரூ.15 ஆயிரமும், வட்டார ஒருங்கிணைப்பாளா் பணிக்கு மாதம் ரூ.12 ஆயிரமும் ஊதியமாக வழங்கப்படும். இந்தப் பணிகளுக்கான எழுத்துத் தோ்வு (75 மதிப்பெண்கள்) வரும் நவம்பா் 15 ஆம் தேதியும், நோ்முகத் தோ்வு (25 மதிப்பெண்கள்) நவம்பா் 21 ஆம் தேதியும் நடைபெறுகிறது. ஆகவே, மேற்கண்ட தகுதியுடைய விண்ணப்பதாரா்கள் வரும் நவம்பா் 10 ஆம் தேதிக்குள் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ விண்ணப்பங்களை அனுப்பிவைக்க வேண்டும்.

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி: இணை இயக்குநா்/ திட்ட இயக்குநா், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மகளிா் திட்டம், எண்-305, மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகம், திருப்பூா்-641604, தொலைபேசி எண்: 0421-2971149.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com