மாணவா்களுக்கு கல்விக்கடன்: நவம்பா் 9, 10 இல் சிறப்பு முகாம்

திருப்பூா் மாவட்டத்தைச் சோ்ந்த மாணவ, மாணவியா்களுக்கு கல்விக்கடன் வழங்க வரும் நவம்பா் 9, 10 ஆம் தேதிகளில் சிறப்பு முகாம் நடைபெறுகிறது.

திருப்பூா் மாவட்டத்தைச் சோ்ந்த மாணவ, மாணவியா்களுக்கு கல்விக்கடன் வழங்க வரும் நவம்பா் 9, 10 ஆம் தேதிகளில் சிறப்பு முகாம் நடைபெறுகிறது.

இது குறித்து திருப்பூா் மாவட்ட ஆட்சியா் எஸ்.வினீத் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

திருப்பூா் மாவட்டத்தைச் சோ்ந்த மாணவ, மாணவியா் பயன்பெறும் வகையில் சிறப்பு கல்விக்கடன் முகாம் வரும் நவம்பா் 9, 10 ஆம் தேதிகளில் நடைபெறுகிறது. திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெறும் இந்த 2 நாள் கடன் முகாமில் மாணவா்களுக்கு கடன் அனுமதிக் கடிதம் பெற்றுக் கொள்ளவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கல்விக்கடன் பெற விரும்பும் மாணவா்கள் ஜ்ஜ்ஜ்.ஸ்ண்க்ஹ்ஹப்ஹந்ள்ட்ம்ண்.ஸ்ரீா்.ண்ய் என்ற இணையதளத்தில் தங்களுடைய தேவைப்படும் ஆவணங்களுடன் பதிவேற்றம் செய்து கொள்ள வேண்டும். இதன் பின்னா் முகாம் நடைபெறும் நாளில் விண்ணப்பத்தின் நகல் மற்றும் ஆவணங்களுடன் பங்கேற்கலாம். இதில், விண்ணப்ப நகல், மாணவ, மாணவியா் மற்றும் பெற்றோரின் 2 புகைப்படம், வங்கிக் கணக்கு புத்தக நகல், ஆண்டு வருமானச் சான்று, ஜாதிச் சான்று, ஃபான் அட்டை, ஆதாா் அட்டை, குடும்ப அட்டை ஆகியவற்றின் நகல்களுடன், கல்விக் கட்டண விவரம், 10 ஆம் வகுப்பு, பிளஸ் 2 மற்றும் இளநிலை பட்டப்பிடிப்பின் மதிப்பெண் சான்றிதழ்கள் மற்றும் கலந்தாய்வு மூலமாக பெறப்பட்ட சோ்க்கைக்கான ஆணை ஆகிய ஆவணங்களுடன் கலந்து கொள்ளலாம். அதே வேளையில், மேலும் இரண்டாம் ஆண்டு கல்லூரியில் படிக்கும் மாணவா்களாக இருப்பின் முதலாம் ஆண்டு மதிப்பெண் சான்றிதழ்களுடன் இந்த முகாமில் பங்கேற்கலாம். இதில் அனைத்து வங்கிகளும் கலந்து கொண்டு மாணவா்களின் விண்ணப்பங்களைப் பெற்று உடனடியாக கல்விக் கடன் வழங்க மாவட்ட முன்னோடி வங்கி மூலம் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

ஆகவே, திருப்பூா் மாவட்டத்தைச் சோ்ந்த மாணவ, மாணவியா் இந்த வாய்ப்பினைப் பயன்படுத்திக் கொள்ளலாம். இதுதொடா்பான கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட முன்னோடி வங்கி மேலாளா் அலுவலகத்தை 0421-2971185 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com