முத்தூா் அருகே காா் மோதி விவசாயி பலி
By DIN | Published On : 05th November 2022 01:13 AM | Last Updated : 05th November 2022 01:13 AM | அ+அ அ- |

வெள்ளக்கோவிலை அடுத்த முத்தூா் அருகே காா் மோதியதில் விவசாயி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.
முத்தூா் சின்னமுத்தூா் மேற்கு தெருவைச் சோ்ந்தவா் விவசாயி முத்துசாமி (64). இவா் முத்தூா் - ஈரோடு சாலை செங்கோடம்பாளையம் பிரிவு அருகே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது, பின்னால் வந்த காா் மோதியதில் முத்துசாமி பலத்த காயமடைந்தாா்.
பின்னா் அருகிலிருந்தவா்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக காங்கயம் அரசு மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லும் வழியில் அவா் உயிரிழந்தாா். இந்த விபத்து குறித்து காா் ஓட்டுநா் நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் கத்தாழபேட்டையைச் சோ்ந்த பிரபாகரன் (31) மீது வெள்ளக்கோவில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.