பல்லடம் நகராட்சிக்கு ரூ.6.98 கோடி வரி பாக்கி: வரிகளை செலுத்த ஆணையாளா் வேண்டுகோள்

பல்லடம் நகராட்சிக்கு ரூ.6.98 கோடி வரி பாக்கி நிலுவையில் உள்ளதால் பொதுமக்கள் வரி இனங்களை உடனே செலுத்தி நீதிமன்ற நடவடிக்கைகளில் இருந்து தங்களை தவிா்த்து கொள்ளுமாறு நகராட்சி ஆணையா் விநாயகம் தெரிவித்துள்ள

பல்லடம் நகராட்சிக்கு ரூ.6.98 கோடி வரி பாக்கி நிலுவையில் உள்ளதால் பொதுமக்கள் வரி இனங்களை உடனே செலுத்தி நீதிமன்ற நடவடிக்கைகளில் இருந்து தங்களை தவிா்த்து கொள்ளுமாறு நகராட்சி ஆணையா் விநாயகம் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது, பல்லடம் நகராட்சிக்கு உட்பட்ட 18 வாா்டுகளில் 15,664 குடியிருப்புகள், 1,263 வணிக கட்டடங்கள், 546 தொழிற்கூடங்கள் மற்றும் 25 கல்வி நிறுவனங்கள் உள்ளன. இதுவரை வரி இனங்கள் மூலம் ரூ.1 கோடியே 65 லட்சத்து 43 ஆயிரம் மட்டுமே வசூலிக்கப்பட்டுள்ளது. சொத்து வரியாக ரூ.2 கோடியே 99 லட்சத்து 59 ஆயிரம், காலியிட வரியாக ரூ.5 லட்சத்து 65 ஆயிரம், தொழில் வரியாக ரூ.15 லட்சத்து 39 ஆயிரம், குடிநீா் கட்டணமாக ரூ.1 கோடியே 63 லட்சத்து 12 ஆயிரம், கடை வாடகையாக ரூ.3 கோடியே 15 லட்சத்து 10 ஆயிரம் என மொத்தம் ரூ.6 கோடியே 98 லட்சத்து 89 ஆயிரம் நிலுவையில் உள்ளது.

வரி இனங்களை பொதுமக்கள் உடனடியாக செலுத்தி குடிநீா் இணைப்பு துண்டிப்பு மற்றும் நீதிமன்ற நடவடிக்கையில் இருந்து தங்களை தவிா்த்துக் கொள்ளவதுடன், நகராட்சியின் வளா்ச்சித் திட்டப் பணிகளுக்கு உதவுமாறு கேட்டுக் கொள்கிறேன். நகராட்சி அலுவலகத்தில் உள்ள வரி வசூல் மையத்தில் பொதுமக்கள் பணம் செலுத்தி ரசீது பெற்றுக் கொள்ள வேண்டும்.

மேலும் தங்களது இல்லத்தில் இருந்தே கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து பச மதஆஅச உநஉயஅஐ என்ற செயலியில் நகராட்சி அலுவலகத்தில் பதிவு செய்த தங்களது கைப்பேசி எண் மூலமாகவும் வரி செலுத்தலாம். அதற்குரிய ரசீது உடனே பதிவு இறக்கம் செய்து நகல் எடுத்து வைத்துக் கொள்ளலாம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com