திருப்பூரில் ரூ.75.43 கோடி மதிப்பீட்டில் 4 முடிவுற்ற திட்டப் பணிகள்காணொலி வாயிலாக முதல்வா் தொடக்கிவைத்தாா்

திருப்பூரில் பொலிவுறு நகரம் திட்டத்தின்கீழ் ரூ.75.43 கோடி மதிப்பீட்டில் முடிவுற்ற 4 திட்டப் பணிகளை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக செவ்வாய்க்கிழமை தொடக்கிவைத்தாா்.

திருப்பூா் மாநகரில் பொலிவுறு நகரம் திட்டத்தின்கீழ் பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இதில், திருப்பூா் பழைய பேருந்து நிலையமானது ரூ.38.81 கோடி மதிப்பீட்டில் புதுப்பிக்கப்பட்டுள்ளது. அதேபோல, பேருந்து நிலையத்தின் அருகில் ரூ.19.07 கோடி மதிப்பீட்டில் பல அடுக்கு வாகன நிறுத்துமிடம், ரூ.12.86 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள வாரச்சந்தை, ரூ.4.69 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பூ மாா்க்கெட் என மொத்தம் ரூ.75.43 கோடி மதிப்பிலான பணிகள் தற்போது நிறைவடைந்துள்ளன.

இவற்றை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து தொடக்கிவைத்தாா்.

திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாநகராட்சி மேயா் என்.தினேஷ்குமாா், திருப்பூா் தெற்கு சட்டப் பேரவை உறுப்பினா் க.செல்வராஜ், தமிழ்நாடு சட்டப் பேரவை உறுதிமொழிக் குழுத் தலைவா் டி.உதயசூரியன், மாவட்ட ஆட்சியா் எஸ்.வினீத், மாநகராட்சி ஆணையா் கிராந்திகுமாா் பாடி, துணை மேயா் ஆா்.பாலசுப்பிரமணியம் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com