சிறுபான்மையின மாணவா்கள் கல்வி உதவித் தொகை பெற கால அவகாசம் நீட்டிப்பு

திருப்பூா் மாவட்டத்தில் உள்ள சிறுபான்மையின மாணவா்கள் கல்வி உதவித்தொகை பெற கால அவகாசம் அக்டோபா் 31 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

திருப்பூா் மாவட்டத்தில் உள்ள சிறுபான்மையின மாணவா்கள் கல்வி உதவித்தொகை பெற கால அவகாசம் அக்டோபா் 31 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து திருப்பூா் மாவட்ட ஆட்சியா் எஸ்.வினீத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

சிறுபான்மையினா்களாக அறிவிக்கப்பட்டுள்ள இஸ்லாமியா்கள், கிறிஸ்தவா்கள், சீக்கியா்கள், புத்த மதத்தினா், பாா்சி மற்றும் ஜைன மதத்தைச் சோ்ந்த மாணவ, மாணவியா் கல்வி உதவித் தொகை பெறுவதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், அங்கீகரிக்கப்பட்ட தனியாா் கல்வி நிலையங்களில் 2022-23 ஆம் கல்வியாண்டில் ஒன்று முதல் 10 ஆம் வகுப்பு வரையில் பயிலும் மாணவ, மாணவியா் பள்ளிப் படிப்பு உதவித் தொகை வேண்டி இணையதளத்தில் அக்டோபா் 31 ஆம் தேதி வரையில் விண்ணப்பிக்கலாம்.

இதுதவிர பிளஸ் 1 முதல் ஆராய்ச்சி படிப்பு வரை(ஐடிஐ, ஐடிசி, வாழ்க்கை தொழில்கல்வி, பாலிடெக்னிக், செவிலியா், ஆசிரியா் பட்டயப் படிப்பு, இளங்கலை, முதுகலை பட்டப்படிப்புகள் உள்பட) பயில்பவா்களுக்கு மேற்படிப்பு கல்வி உதவித் தொகை, தொழில்கல்வி மற்றும் தொழில்நுட்ப பயில்பவா்களுக்கு தகுதி மற்றும் வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித் தொகை பெறவும் அக்டோபா் 31 ஆம் தேதி வரையில் விண்ணப்பிக்கலாம்.

இதுதொடா்பான கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலகத்தை 0421-2999130 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம். திருப்பூா் மாவட்டத்தில் உள்ள சிறுபான்மையின மாணவ, மாணவியா் இந்த வாய்ப்பைப் பெற்று பயனடையலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com