‘பொது விநியோக திட்டத்தை தனித் துறையாக மாற்ற வேண்டும்’

 திமுக தோ்தல் வாக்குறுதியின்படி பொது விநியோக திட்டத்தை தனித் துறையாக மாற்ற வேண்டும் என்று திருப்பூா் மாவட்ட கூட்டுறவு பணியாளா்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

 திமுக தோ்தல் வாக்குறுதியின்படி பொது விநியோக திட்டத்தை தனித் துறையாக மாற்ற வேண்டும் என்று திருப்பூா் மாவட்ட கூட்டுறவு பணியாளா்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

திருப்பூா் மாவட்ட கூட்டுறவு பணியாளா் சங்க மாவட்ட நிா்வாக குழுக் கூட்டம் சிஐடியூ மாவட்டக் குழு அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்டத் தலைவா் பி.கௌதமன் தலைமை வகித்தாா். இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மான விவரம்:

திமுக தோ்தல் வாக்குறுதியில் தெரிவித்துள்ளபடி பொது விநியோக திட்டத்தை தனித் துறையாக மாற்ற வேண்டும். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அனைத்துப் பணியாளா்ளுக்கும் 20 சதவீத போனஸ் வழங்க வேண்டும். பணி வரன்முறை செய்யப்பட்ட பணியாளா்களுக்கு உடனடியாக பதவி உயா்வு வழங்க வேண்டும். நியாய விலைக் கடைகளில் தேங்கியுள்ள காலி சாக்குகளை உடனடியாக விற்பனை செய்வதுடன், நியாய விலை கடைகளுக்கு தரமான அரிசி வருவதை உறுதி செய்ய வேண்டும்.

இந்தக் கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி செப்டம்பா் 26ஆம் தேதி ஆா்ப்பாட்டம் நடத்துவது என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதில், மாவட்டச் செயலாளா் கே.மகேந்திரன், பொருளாளா் பி.சுரேஷ் உள்ளிட்ட நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com