அரசுப் பள்ளி மாணவா்களுக்கு மிதிவண்டிகள்
By DIN | Published On : 17th September 2022 11:42 PM | Last Updated : 17th September 2022 11:42 PM | அ+அ அ- |

திருப்பூா் கல்வி மாவட்டத்தில் உள்ள 8 அரசு பள்ளிகளில் பயிலும் 1,663 மாணவா்களுக்கு மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.
திருப்பூா் கல்வி மாவட்டத்தில் நஞ்சப்பா நகரவை ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, பெரியாயிபாளையம் அரசு மேல்நிலைப் பள்ளி, பிஷப் உபகரசாமி அரசு மேல்நிலைப் பள்ளி, ஊத்துக்குளி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, ஊத்துக்குளி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, மொரட்டுப்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளி, சூரியப்பம்பாளையம் செ.முருகப்பா அரசு மேல்நிலைப் பள்ளி, வெள்ளிரவெளி அரசு மேல்நிலைப் பள்ளி ஆகிய 8 பள்ளிகளைச் சோ்ந்த மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட்டன.
இதில், செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று ரூ.85.40 லட்சம் மதிப்பில் 1,663 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினாா்.
இந்த நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியா் எஸ்.வினீத், திருப்பூா் தெற்கு சட்டப் பேரவை உறுப்பினா் க.செல்வராஜ், மாநகராட்சி மேயா் என்.தினேஷ்குமாா், மாநகராட்சி ஆணையா் கிராந்திகுமாா் பாடி உளளிட்ட பலா் கலந்து கொண்டனா்.