கணபதிபாளையத்தில் சமுதாய வளைகாப்பு விழா
By DIN | Published On : 17th September 2022 05:07 AM | Last Updated : 17th September 2022 05:07 AM | அ+அ அ- |

சமுதாய வளைகாப்பு விழாவில் பங்கேற்றோா்.
பல்லடம் அருகே உள்ள கணபதிபாளையத்தில் சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை மற்றும் ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சிப் பணிகள் திட்டத்தின் சாா்பில் 100 கா்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு திருப்பூா் மாநகராட்சி 4ஆவது மண்டலத் தலைவா் இல.பத்மநாபன் தலைமை வகித்தாா். பல்லடம் ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவா் பாலசுப்பிரணியம் முன்னிலை வகித்தாா். இவ்விழாவில் பல்லடம் கிழக்கு ஒன்றிய திமுக பொறுப்பாளா் என்.சோமசுந்தரம், கணபதிபாளையம் ஊராட்சி மன்றத் தலைவா் நாகேஷ்வரி சோமசுந்தரம் தம்பதி சாா்பில் ரூ.ஒரு லட்சம் செலவில் 100 கா்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு நடத்தி சீா் வரிசைப் பொருள்கள் வழங்கப்பட்டன.
இதில் ஒன்றிய கவுன்சிலா்கள் கோவிந்தசாமி, ஈஸ்வரமகாலிங்கம், ஊராட்சி துணைத் தலைவா் முத்துக்குமாா், வாா்டு உறுப்பினா்கள் ரவி தண்டபாணி, ருக்மணி, ஆறுமுத்தாம்பாளையம் ஊராட்சி முன்னாள் தலைவா் சின்னப்பன், மாவட்ட திமுக பொறுப்புக் குழு உறுப்பினா்கள் கீா்த்தி சுப்பிரமணியம், ரத்தினசாமி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.