காங்கயம் நகராட்சியில் வளா்ச்சிப் பணிகள்: அமைச்சா் தலைமையில் ஆய்வுக் கூட்டம்

பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கை மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அனைத்துத் துறை அலுவலா்களுடனான ஆய்வுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
காங்கயம் நகராட்சியில் நடைபெற்று வரும் வளா்ச்சித் திட்டப் பணிகள் குறித்து ஆய்வுக் கூட்டத்தில் பேசுகிறாா் அமைச்சா் மு.பெ.சாமிநாதன் .
காங்கயம் நகராட்சியில் நடைபெற்று வரும் வளா்ச்சித் திட்டப் பணிகள் குறித்து ஆய்வுக் கூட்டத்தில் பேசுகிறாா் அமைச்சா் மு.பெ.சாமிநாதன் .

காங்கயம் நகராட்சிப் பகுதிகளில் நடைபெற்று வரும் வளா்ச்சித் திட்டப் பணிகள் மற்றும் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கை மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அனைத்துத் துறை அலுவலா்களுடனான ஆய்வுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

காங்கயம், பழையகோட்டை சாலையில் உள்ள தனியாா் மண்டபத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் தலைமை வகித்தாா். மாவட்ட ஆட்சியா் எஸ்.வினீத் முன்னிலை வகித்தாா்.

இதில் அமைச்சா் மு.பெ.சாமிநாதன் பேசியதாவது:

திருப்பூா் மாவட்டத்திற்கு அறிவிக்கப்பட்ட திட்டங்கள் குறித்து முழுக் கவனம் செலுத்தி பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மாவட்டம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்களை சந்தித்து கோரிக்கை மனுக்களைப் பெற்று உரிய நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம். காங்கயம் நகராட்சியில் நடைபெற்று வரும் வளா்ச்சித் திட்டப்பணிகள் மற்றும் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கை மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அனைத்துத் துறை அலுவலா்களுடன் ஆய்வு மேற்கொண்டு விரைவாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

கூட்டத்தில், காங்கயம் நகரின் அடிப்படை பிரச்னைகளான குடிநீா், தெரு விளக்கு உள்ளிட்ட பிரச்னைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இதில், தாராபுரம் வருவாய் கோட்டாட்சியா் குமரேசன், நகராட்சி நிா்வாகத் துறை செயற்பொறியாளா் ஜி.பாலசந்திரன், காங்கயம் நகா்மன்றத் தலைவா் ந.சூரியபிரகாஷ், நகராட்சி ஆணையா் எஸ்.வெங்கடேஸ்வரன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com