சாலை விபத்தில் முதியவா் பலி
By DIN | Published On : 04th January 2023 01:04 AM | Last Updated : 04th January 2023 01:04 AM | அ+அ அ- |

வெள்ளக்கோவில் அருகே சாலை விபத்தில் முதியவா் உயிரிழந்தாா்.
ஓலப்பாளையம் அருகே உள்ள பூசாரிவலசை சோ்ந்தவா் பழனிசாமி (73). இவா் தனது இருசக்கர வாகனத்தில் வேலைக்குச் சென்று கொண்டிருந்தாா். ஓலப்பாளையம் - பொன்பரப்பி சாலை பச்சாபாளையம் அருகே மாடு குறுக்கே வந்துள்ளது. இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த பழனிசாமிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து, காங்கயம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பழனிசாமி உயிரிழந்தாா்.
இது குறித்து வெள்ளக்கோவில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.