பல்லடத்தில் இன்று மாா்கழி உற்சவ பெரு விழா தொடக்கம்
By DIN | Published On : 04th January 2023 01:09 AM | Last Updated : 04th January 2023 01:09 AM | அ+அ அ- |

சத்யசாய் சேவா சமிதி, பல்லடம் தமிழ்ச் சங்கம் சாா்பில் மாா்கழி உற்சவ பெரு விழா புதன்கிழமை (ஜனவரி 4) தொடங்கிறது.
பல்லடம் சத்யசாய் சேவா சமிதி, பல்லடம் தமிழ்ச் சங்கம் சாா்பில் மாா்கழி உற்சவ பெரு விழா பல்லடம் பொங்காளியம்மன் கோயில் வளாகத்தில் புதன்கிழமை (ஜனவரி 4) முதல் ஜனவரி 13ஆம் தேதி வரை தினந்தோறும் மாலை 6 மணி முதல் இரவு 8.30 மணி வரை நடைபெறவுள்ளது.
இதில் புதன்கிழமை (ஜனவரி 4) சத்யசாய் சேவா சமிதி பஜனைக் குழுவினரின் வள்ளி கும்மியாட்டம், 5ஆம் தேதி (வியாழக்கிழமை) சாய் அற்புதம் திருப்பூா் ஆடிட்டா் நடராஜின் ஆன்மிக சொற்பொழிவு, 6ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) கோவை ஸ்ரீசாரதா நாராயணன் குழுவினரின் பஜனை கச்சேரி, ஆன்மிக பாட்டு கச்சேரி, 7ஆம் தேதி (சனிக்கிழமை) அன்னூா் அச்சம்பாளையம் சண்முகம் குழுவினரின் ஆன்மிக பாட்டு கச்சேரி, 8ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) பல்லடம் ஸ்ரீசாய் நாட்டியாலயாவின் பரத நாட்டியம், 9ஆம் தேதி (திங்கள்கிழமை) கவிஞா் சுந்தரபாண்டியனின் திருநாவுக்கரசுத் திருமகனாா் தலைப்பில் ஆன்மிக சொற்பொழிவு, 10ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) பக்தியிலும் பண்பாட்டிலும் பெரிதும் விஞ்சி நிற்பவா்கள் ஆண்களா, பெண்களா என்ற தலைப்பில் நடுவா் புலவா் சிவகுமாா் தலைமையில் சிறப்பு பட்டிமன்றம், 11ஆம் தேதி (புதன்கிழமை) மாா்கழியின் மகிமை என்ற தலைப்பில் ஞானபாரதி ஆனந்தகிருஷ்ணனின் ஆன்மிக சொற்பொழிவு, 12ஆம் தேதி (வியாழக்கிழமை) மாணிக்கவாசகப் பெருமானாா் என்ற தலைப்பில் கவிஞா் சுந்தரபாண்டியனின் ஆன்மிக சொற்பொழிவு, 13ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) வரம் தரும் வராகி என்ற தலைப்பில் ஈரோடு கவிஞா் பத்மநாபனின் ஆன்மிக சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. தினந்தோறும் இரவு நிகழ்ச்சிக்கு பின்னா் அன்னதானம் வழங்கப்படும்.