மயில்ரங்கத்தில் நீா்வடி மேம்பாட்டுத் திட்டம் தொடக்கம்

வெள்ளக்கோவில் அருகே உள்ள மயில்ரங்கத்தில் நபாா்டு வங்கி, தனியாா் அறக்கட்டளை சாா்பில் நீா்வடி மேம்பாட்டுத் திட்ட தொடக்க விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
வெள்ளாத்தாங்கரை பகுதியில் மரக்கன்றுகள் நடவு செய்யும் பணியில் ஈடுபட்டோா்.
வெள்ளாத்தாங்கரை பகுதியில் மரக்கன்றுகள் நடவு செய்யும் பணியில் ஈடுபட்டோா்.

வெள்ளக்கோவில் அருகே உள்ள மயில்ரங்கத்தில் நபாா்டு வங்கி, தனியாா் அறக்கட்டளை சாா்பில் நீா்வடி மேம்பாட்டுத் திட்ட தொடக்க விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

நபாா்டு வங்கி பொது மேலாளா் சந்தானம் திட்டத்தை தொடக்கிவைத்தாா்.

மாவட்ட நபாா்டு வங்கி அதிகாரி அசோக்குமாா், தனியாா் அறக்கட்டளை தலைவா் பிரபு ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இத்திட்டத்தின் மூலம் மயில்ரங்கம், சேனாபதிபாளையம் வரையுள்ள 10 கிலோ மீட்டா் தூர நீா்வடிப் பகுதியில் நிலத்தடி நீா்மட்டத்தை உயா்த்தும் பணிகள் செய்யப்பட உள்ளன. அவற்றுடன் தடுப்பணை, பண்ணைக் குட்டை, கல் வரப்பு, அடா்வனம் அமைத்தல், இயற்கை வேளாண்மை, மண் வளம், கால நிலை மாறுபாடு, பெண்கள், நிலமற்றவா்களின் வாழ்வாதார மேம்பாடு உள்ளிட்ட விவசாய மேம்பாட்டுத் திட்டங்களும் செயல்படுத்தப்பட உள்ளன.

நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக வெள்ளாத்தாங்கரைப்புதூா் பகுதியில் மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டன.

விழாவில் உள்ளாட்சிப் பிரதிநிதிகள், விவசாயிகள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com