ரூ.8.27 கோடி மதிப்பீட்டில் வளா்ச்சிப் பணி: மாவட்ட ஆட்சியா் ஆய்வு
By DIN | Published On : 22nd January 2023 01:59 AM | Last Updated : 22nd January 2023 01:59 AM | அ+அ அ- |

வெள்ளக்கோவில் பகுதியில் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியா் எஸ்.வினீத்.
வெள்ளக்கோவில் நகராட்சியில் ரூ.8.27 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் பல்வேறு
வளா்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியா் எஸ்.வினீத் சனிக்கிழமை ஆய்வு செய்தாா்.
வெள்ளக்கோவில் நகராட்சிப் பகுதிகளில் ரூ.8.27 கோடி மதிப்பீட்டில் குடிநீா்த் திட்டப் பணிகள், தூய்மை பாரத இயக்கத் திட்டத்தின்கீழ் செம்மாண்டம்பாளையம், அகலரைப்பாளையம்புதூா், உப்புப்பாளையத்தில் கழிப்பறை கட்டுமானப் பணிகள், துரை ராமசாமி நகா், தாராபுரம் சாலையில் வடிகால் கட்டுமான பணி, வெள்ளக்கோவில் நகரம், கணபதிபாளையத்தில் பூங்கா, வெள்ளக்கோவில் தினசரி சந்தை கட்டுமானப் பணி உள்ளிட்ட பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இப்பணிகளை மாவட்ட ஆட்சியா் எஸ்.வினீத், ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சிறப்பு செயலாளரும், திருப்பூா் மாவட்ட வளா்ச்சிப் பணிகள் கண்காணிப்பு அலுவலருமான எம். கருணாகரன் உள்ளிட்டோா் சனிக்கிழமை ஆய்வு செய்தனா்.
பணிகளை விரைவாகவும், தரமாகவும் முடிக்க வேண்டும் என சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனா்.