நாளைய மின்தடை: காங்கயம்
By DIN | Published On : 15th June 2023 09:15 PM | Last Updated : 15th June 2023 09:15 PM | அ+அ அ- |

காங்கயம் துணை மின் நிலையத்தில் அவசர கால பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் கீழ்க்கண்ட இடங்களில் சனிக்கிழமை (ஜூன் 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என தமிழ்நாடு மின்வாரிய காங்கயம் செயற்பொறியாளா் வெ.கணேஷ் தெரிவித்துள்ளாா்.
மின்தடை செய்யப்படும் இடங்கள்:
காங்கயம் நகரத்துக்கு உள்பட்ட திருப்பூா் சாலை, கரூா் சாலை, கோவை சாலை, தாராபுரம் சாலை, சென்னிமலை சாலை, பழையகோட்டை சாலை, அகஸ்திலிங்கம்பாளையம், செம்மங்காளிபாளையம், அா்த்தநாரிபாளையம், பொத்தியபாளையம், சிவன்மலை, நால்ரோடு, படியூா்.