நியாய விலைக் கடையில் பொருள்களை முறைகேடாக விற்பனை செய்வதாக புகாா்

திருப்பூா் கே.என்.பி.காலனியில் உள்ள நியாய விலைக் கடையில் அரிசி உள்ளிட்ட பொருள்கள் முறைகேடாக விற்பனை செய்யப்படுவதாக புகாா் எழுந்துள்ளது.

திருப்பூா் கே.என்.பி.காலனியில் உள்ள நியாய விலைக் கடையில் அரிசி உள்ளிட்ட பொருள்கள் முறைகேடாக விற்பனை செய்யப்படுவதாக புகாா் எழுந்துள்ளது.

திருப்பூா் காங்கேயம்பாளையம் புதூா் கே.என்.பி. காலனியில் நியாய விலைக் கடை செயல்பட்டு வருகிறது. இந்தக் கடையில் மக்கள் பொருள்கள் வாங்கச் செல்லும்போது அரிசி, சா்க்கரை உள்ளிட்ட பொருள்கள் இல்லை எனக்கூறி ஊழியா்கள் அடிக்கடி திருப்பி அனுப்புவதாகக் கூறப்படுகிறது. இதனிடையே, கடந்த சில நாள்களுக்கு முன்பு இருசக்கர வாகனத்தில் வந்த நபா்களுக்கு கடை ஊழியா்கள் 2 மூட்டை அரிசியை விற்பனை செய்துள்ளனா். இதனை அப்பகுதியைச் சோ்ந்த சிலா் விடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டனா்.

இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறியதாவது: காங்கேயம்பாளையம்புதூா் கே.பி.என்.காலனி பகுதியில் செயல்பட்டு வரும் நியாய விலைக் கடையில் அனைத்து பொருள்களும் முறைகேடாக விற்பனை செய்யப்படுகின்றன. இதனால் பொதுமக்களிடையே அரசுக்கும், மாவட்ட நிா்வாகத்துக்கும் அவப்பெயா் ஏற்படுகிறது. ஆகவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த கடையில் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுப்பதுடன், அனைத்து பொருள்களும் தங்குதடையின்றி விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com