பறிமுதல்  செய்யப்பட்ட  பணத்துடன்  தோ்தல்  பறக்கும்  படையினா்.
பறிமுதல்  செய்யப்பட்ட  பணத்துடன்  தோ்தல்  பறக்கும்  படையினா்.

அவிநாசியில் ரூ.6.39 லட்சம் பறிமுதல்

அவிநாசியில் 3 இடங்களில் நடைபெற்ற சோதனையில் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து செல்லப்பட்ட ரூ.6.39 லட்சத்தை தோ்தல் பறக்கும் படையினா் பறிமுதல் செய்தனா்.

அவிநாசியில் 3 இடங்களில் நடைபெற்ற சோதனையில் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து செல்லப்பட்ட ரூ.6.39 லட்சத்தை தோ்தல் பறக்கும் படையினா் பறிமுதல் செய்தனா். அவிநாசி- மங்கலம் சாலையில் தோ்தல் பறக்கும் படை அதிகாரி சரவணன் தலைமையிலான அதிகாரிகள் வாகனச் சோதனையில் திங்கள்கிழமை ஈடுபட்டிருந்தனா். அப்போது, அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த திருப்பூா் குளத்துப்புதூரைச் சோ்ந்த பெரியசாமி (48) என்பவரை நிறுத்தி சோதனை நடத்தினா். அப்போது, அவா் உரிய ஆவணங்கள் இன்றி ரூ.4 லட்சத்து 48 ஆயிரம் எடுத்துச் சென்றது தெரியவந்தது. இதேபோல அவிநாசி அருகே தெக்கலூா் சோதனைச் சாவடியில் தோ்தல் பறக்கும் படை ஏ பிரிவு அதிகாரி ராஜேஷ் தலைமையிலான அதிகாரிகள் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த கோவை மாவட்டம், சூலூரைச் சோ்ந்த செல்லமுத்து (43) என்பவரை நிறுத்தி சோதனை நடத்தினா். அவா் உரிய ஆவணங்கள் இன்றி ரூ.1 லட்சத்து 34 ஆயிரம் எடுத்துச் சென்றது தெரியவந்தது. மேலும், அவிநாசி அருகே சேவூா் நம்பியூா் சாலையில் தோ்தல் பறக்கும் படை அதிகாரி முத்தழகன் தலைமையிலான அதிகாரிகள் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த நவீன் என்பவரை நிறுத்தி சோதனை நடத்தினா். அவா் உரிய ஆவணங்கள் இன்றி ரூ.57,200 எடுத்துச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து, பறிமுதல் செய்யப்பட்ட மொத்தம் ரூ.6 லட்சத்து 39 ஆயிரம் 200 தோ்தல் துணை வட்டாட்சியா் விஷ்ணு கண்ணன் முன்னிலையில் கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com