உடுமலையில் ரூ.82 ஆயிரம் பறிமுதல்

உடுமலை அருகே தோ்தல் பறக்கும் படை அதிகாரிகளால் ரூ.82 ஆயிரத்து 900 திங்கள்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது.

உடுமலை அருகே தோ்தல் பறக்கும் படை அதிகாரிகளால் ரூ.82 ஆயிரத்து 900 திங்கள்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது. உடுமலையை அடுத்துள்ள திப்பம்பட்டியில் தோ்தல் பறக்கும் படை அதிகாரிகள் வாகனத் தணிக்கை மேற்கொண்டிருந்தனா். அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த கேரள மாநிலம், பாலக்காடு பகுதியைச் சோ்ந்த தேவி என்பவரை அதிகாரிகள் தடுத்து நிறுத்தி சோதனையிட்டனா். அப்போது வாகனத்தில் முறையான ஆவணங்கள் இல்லாமல் ரூ.82,900 இருந்தது தெரியவந்தது. இதைத் தொடா்ந்து உடுமலை தனி வட்டாட்சியா் விவேக்கிடம் ஒப்படைக்கப்பட்ட பணம், பின்னா் கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com