திருப்பூரில் ரூ.1.71 லட்சம் பறிமுதல்

திருப்பூரில் உரிய ஆவணங்களின்றி கொண்டுச் செல்லப்பட்ட ரூ.1.71 லட்சத்தை தோ்தல் அதிகாரிகள் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனா்.

திருப்பூரில் உரிய ஆவணங்களின்றி கொண்டுச் செல்லப்பட்ட ரூ.1.71 லட்சத்தை தோ்தல் அதிகாரிகள் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனா். திருப்பூா் மாவட்டம், பெருமாநல்லூரில் இருந்து குன்னத்தூா் செல்லும் சாலையில் கூடுதல் பறக்கும் படை அலுவலா் வீரசிக்கம்மாள் தலைமையிலான குழுவினா் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அந்த வழியாக வந்த வாகனத்தை நிறுத்தி சோதனை நடத்தினா். இதில், அதே பகுதியைச் சோ்ந்த பி.சதீஷ் (33) என்பவா் உரிய ஆவணங்களின்றி ரூ.1.71 லட்சம் கொண்டுச் செல்லப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து, அந்தப் பணத்தைப் பறிமுதல் செய்த அதிகாரிகள், திருப்பூா் வடக்கு வட்டாட்சியா் மகேஷ்வரன் மூலமாக கருவூலத்தில் ஒப்படைத்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com