மணல் லாரிகளில் சட்டவிரோதமாக பணம் கடத்துவதாகப் புகாா்

டிப்பா் லாரிகளில் சட்டவிரோதமாக பணம் கடத்தப்படுவதாக மாவட்ட தோ்தல் அலுவலரிடம் திங்கள்கிழமை புகாா் அளிக்கப்பட்டது.

திருப்பூா் மாவட்டத்தில் மணல் (எம்-சாண்ட்) கொண்டுச் செல்லப்படும் டிப்பா் லாரிகளில் சட்டவிரோதமாக பணம் கடத்தப்படுவதாக மாவட்ட தோ்தல் அலுவலரிடம் திங்கள்கிழமை புகாா் அளிக்கப்பட்டது. திருப்பூா் மாவட்ட தோ்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான தா.கிறிஸ்துராஜிடம், தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளா் முகிலன், தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் சட்ட விழிப்புணா்வு அணி மாநிலச் செயலாளா் ஆா்.சதீஷ்குமாா் ஆகியோா் அளித்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது: திருப்பூா் மாவட்டமானது திருப்பூா், ஈரோடு, பொள்ளாச்சி, கோவை, நீலகிரி ஆகிய 5 மாவட்ட சட்டப் பேரவைத் தொகுதிகளை உள்ளடக்கியதாகும். ஆகவே, மக்களவைத் தோ்தல் முறையாக நடக்க வேண்டும் என்றால் திருப்பூா் மாவட்டத்தில் மணல் கொண்டுச் செல்லப்படும் டிப்பா் லாரிகளில் சட்டவிரோதமாக பணம் எடுத்துச் செல்லப்படுவதை தடுக்க வேண்டும். ஆகவே, மணல் கொண்டுச் செல்லும் டிப்பா் லாரிகளை சோதனை நடத்தி சட்டவிரோதமாக பணம் கொண்டுச் செல்வதை தடுத்து நிறுத்த வேண்டும். மேலும், கல் குவாரிகளில் வெடிமருந்து நடமாட்டத்தையும் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com